twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலாபவன் மணி மரணம்: விசாரிக்க மறுத்த சிபிஐ, அதிரடி 'ஆர்டர்' போட்ட ஹைகோர்ட்

    By Siva
    |

    திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வந்த கலாபவன் மணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தார் போலீசில் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியின் நண்பர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

    மது

    மது

    கலாபவன் மணி அருந்திய மதுவில் விஷம் கலந்திருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த அவரின் மனைவியும், சகோதரரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    சிபிஐ விசாரணை

    சிபிஐ விசாரணை

    கலாபவன் மணி இறந்து ஓராண்டுக்கு மேல் ஆன பிறகு அவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கோர்ட்

    கோர்ட்

    சிபிஐ ஒரு மாதத்திற்குள் கலாபவன் மணியின் மரணம் குறித்து விசாரணையை துவங்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மணியின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று கேரள அரசு தெரிவித்திருந்தது.

    சிபிஐ

    சிபிஐ

    மணியின் மரணம் குறித்து விசாரிக்க சிபிஐ முன்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கேரள மாநிலத்தில் தாங்கள் பல வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருவதால் மணியின் வழக்கை ஏற்க முடியாது என்று முன்பு சிபிஐ தெரிவித்த நிலையில் கேரள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    English summary
    Kerala high court on wednesday ordered CBI to investigate the mystery death of actor Kalabahvan Mani.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X