twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காந்தாரா ‘வராஹ ரூபம்’ பாடல் வழக்கு.. கேரள உயர்நீதிமன்றம் கொடுத்த பரபர தீர்ப்பு!

    |

    சென்னை: காந்தாரா படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது. இந்த படம் இத்தனை கால தாமதமாக வெளியாக காரணமே அந்த 'வராஹ ரூபம்' பாடல் வழக்கு தான்.

    ஏற்கனவே கோழிக்கோடு, மற்றும் பாலக்காடு நீதிமன்றங்கள் பாட்டுக்கு தடை உத்தரவு போட்ட நிலையில், காந்தாரா படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றது.

    இந்நிலையில், உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு காந்தாரா படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியது.

    ஓடிடியில் வெளியானது காந்தாரா.. நள்ளிரவில் இருந்தே பார்க்க ஆரம்பித்த ரசிகர்கள்.. கடைசியில் அப்செட்! ஓடிடியில் வெளியானது காந்தாரா.. நள்ளிரவில் இருந்தே பார்க்க ஆரம்பித்த ரசிகர்கள்.. கடைசியில் அப்செட்!

    கோவிந்த் வசந்தா குழு

    கோவிந்த் வசந்தா குழு

    96' திரைப்படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும் அவருடைய நண்பர்களும் இணைந்து 2013-ஆம் ஆண்டு முதல் 'தைக்குடம் பிரிட்ஜ்' எனும் இசைக்குழுவை நடத்தி வருகின்றனர். மலையாள மொழியில் தனிப்பாடல்களை இந்த குழு வெளியிட்டு வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு 'நவரசம்' என்கிற பாடலை இக்குழு இயற்றி வெளியிட்டது. அந்த பாடலை தழுவியே உரிய அனுமதி இல்லாமல் வராஹ ரூபம் பாடல் உருவானதாக சர்ச்சை கிளம்பியது.

    பாடல் திருட்டு

    பாடல் திருட்டு

    அதில், "வராஹ ரூபம் பாடல் காப்புரிமைச் சட்டத்தை மீறி இயற்றப்பட்டிருக்கிறது. பாடல் திருட்டுக்கும் பாடலைத் தழுவி இயற்றப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்பாடல் நவரசம் பாடலின் காப்பி என்பதால் சட்டரீதியாக காந்தாரா படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். எங்களது பாடலின் காப்புரிமையைப் பாதுகாக்க ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து கேரள மாநிலம் கோழிக்கோடு நீதிமன்றத்தில் தைக்குடம் பிரிட்ஜ் இசைக்குழு வழக்கு தொடர்ந்தது.

    2 நீதிமன்றங்களில் உத்தரவு

    2 நீதிமன்றங்களில் உத்தரவு

    இந்த வழக்கு தொடர்பாக கோழிக்கோடு நீதிமன்றமும் பாலக்காடு நீதிமன்றமும் வராஹ ரூபம் பாடல் காப்புரிமைச் சட்டத்தை மீறி உருவாக்கப்பட்ட பாடல் தான் எனக் கூறி தியேட்டர்களில் இருந்தும் யூடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் இருந்தும் நீக்க உத்தரவிட்டன.

    கேரளா ஹைகோர்ட் அதிரடி

    கேரளா ஹைகோர்ட் அதிரடி

    அதன் பின்னரும், காந்தாரா தயாரிப்பு நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அதிரடியாக அறிவித்து தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி விட்டார்.

    வராஹ ரூபம் இல்லாமல்

    வராஹ ரூபம் இல்லாமல்

    கேரள உயர்நீதிமன்றமும் கோவிந்த் வசந்தா குழுவினருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய நிலையில், அமேசான் பிரைமில் இன்று வராஹ ரூபம் பாடல் இல்லாமல் காந்தாரா திரைப்படம் வெளியானது. படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அந்த பாடல் இல்லாமல் இந்த படமே சுவாரஸ்யமாக இல்லை என விமர்சித்து வருகின்றனர். காந்தாரா படம் 400 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kerala High Court dismisses Kantara movie"Varaha Roopam" song case
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X