நோட்டீஸ் கொடுக்காமல் சன்னி லியோனை கைது செய்யக் கூடாது.. கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருவனந்தபுரம்: முறையான நோட்டீஸ் கொடுக்காமல் சன்னி லியோனை கைது செய்யக் கூடாது என கேரள குற்றப்பிரிவு போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்பத்துடன் கேரளா வந்துள்ள சன்னி லியோன் மீது தொடரப்பட்டுள்ள மோசடி புகார் மீது கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசடி புகார் வழக்கில் முன் ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் செவ்வாயன்று நடிகை சன்னி லியோன் முறையிட்டு இருந்தார்.

கேரளாவில் சன்னி லியோன்

கேரளாவில் சன்னி லியோன்

கேரளாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார் நடிகை சன்னி லியோன். மேலும் எம்டிவியின் ஸ்போர்ட்ஸ் வில்லாவுக்கான ஷூட்டிங்கிலும் பங்கேற்று வருகிறார் நடிகை சன்னி லியோன். சுற்றுலா வந்த இடத்தில் சன்னி லியோனுக்கு புதிய சிக்கல் உருவாகி உள்ளது.

ஏமாற்றினாரா சன்னி

ஏமாற்றினாரா சன்னி

கேரளாவில் கடந்த 2019ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சன்னி லியோனுக்கு சுமார் 29 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால், அவர் கலந்து கொள்ளாமல் ஏமாற்றினார் என பெரும்பாவூரைச் சேர்ந்த ஆர். ஷியாஸ் என்பவர் கேரள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அதிரடி கைது

அதிரடி கைது

இந்த மோசடி வழக்கு தொடர்பாக கேரளாவில் சுற்றுலா செய்து வரும் நடிகை சன்னி லியோனிடம் கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய நிலையில், நடிகை சன்னி லியோனை அதிரடியாக கைது செய்யவும் ஏற்பாடுகள் தீவிரம் காட்டப்படுவதாக தகவல்கள் பரவியது பரபரப்பை கிளப்பியது.

முன் ஜாமீன் கோரி

முன் ஜாமீன் கோரி

சூழ்நிலையை புரிந்து கொண்ட நடிகை சன்னி லியோன், முன் ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு அளித்தார். தன்னையும் தனது கணவர் டேனியல் வெப்பரையும் இது தொடர்பாக கைது செய்யக் கூடாது என்றும், போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் கூறியுள்ளார்.

கைது பண்ணக் கூடாது

கைது பண்ணக் கூடாது

நடிகை சன்னி லியோனின் மனுவை இன்று விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், நடிகை சன்னி லியோனை முன் அறிவிப்பு ஏதுமின்றி கைது செய்யக் கூடாது என கேரள குற்றப்பிரிவு போலீசாருக்கு அதிரடி தடை விதித்துள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது.

எதையும் நம்பாதீங்க

எதையும் நம்பாதீங்க

இந்நிலையில், தற்போது கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில், நீங்க படிக்கிற எதையுமே நம்பாதீங்க, ஆனால், உங்கள் முன்னால் எது இருக்கிறதோ அதை மட்டுமே நம்புங்க என தனது சில கவர்ச்சிகரமான போட்டோக்களையும் பதிவிட்டு மறைமுகமாக இந்த விவகாரம் தொடர்பாக ட்வீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X