சினிமாவில் பெண்களுக்கு எதிரான சீண்டல்கள்.. விசாகா கமிட்டியை அமைக்க பெண்கள் சங்கம் கோரிக்கை !

கேரளா : கேரள மாநில பெண்கள் கமிஷன், கேரள சாலசித்ரா அகாடமி போன்றவற்றிடம் விசாகா கமிட்டியை தாமதப்படுத்தாமல் உடனேயாக அமைக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

ரீமா கல்லிங்கல், பார்வதி, ரம்யா நம்பீசன் போன்ற முன்னணி நடிகைகள் முன் எடுக்கும் முயற்சியால் கேரள அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

‘Women in Cinema Collective

‘Women in Cinema Collective

கடந்த 2017-ம் ஆண்டு மலையாள நடிகையொருவர் நள்ளிரவில் சிலரால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார். இது குறித்து அந்த நடிகை அங்கத்தினராக இருக்கும் மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பு தீவிர நடவடிக்கையில் இறங்கவில்லை என்று சொல்லி மலையாள சினிமாவில் இருக்கும் பெண்கள் பலர் இணைந்து 'Women in Cinema Collective' என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கினார்கள்.

விசாகா கமிட்டி

விசாகா கமிட்டி

இந்த அமைப்பின் சார்பில் கேரள உயர்நீதி மன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்கள். அந்த மனுவில் பெண்களுக்கெதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக சுப்ரீம் கோர்ட் வகுத்துக் கொடுத்த விசாகா கமிட்டியை அம்மா அமைப்பிலும், மலையாள திரைத்துறையிலும் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்கள்.

பல போராட்டம்

பல போராட்டம்

ஆனால் இன்று வரை அப்படி ஒரு கமிட்டியை கேரள அரசு அமைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்வதி, ரீமா கல்லிங்கல் போன்ற நடிகைகள் விசாக கமிட்டி அமைப்பை அமைக்காமல் தாமதப்படுத்தும் அரசை எதிர்த்து கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.

பிப் 14ந் விசாரணை

பிப் 14ந் விசாரணை

இது குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கும்படி கேரள மாநில பெண்கள் கமிஷன், கேரள சாலசித்ரா அகாடமி போன்றவற்றிடம் கேரள உயர்நீதிமன்றம் கேட்டிருந்தது. இதன்படி கேரள மாநில பெண்கள் கமிஷன் தாக்கல் செய்த அபிடவிட்டில் விசாகா கமிட்டியை தாமதம் செய்யாமல் உடனேயே அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இப்போது இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X