அநியாயம்..நடிகையிடம் அத்துமீறிய நபர்.. சிறையிலிருந்து வெளியே வந்தவரை மாலை போட்டு வரவேற்ற இளைஞர்கள்!
சென்னை : ஓடும் பேருந்தில் நடிகையிடம் அந்தரங்க உறுப்பை காட்டி அசிங்கமாக நடந்து கொண்ட நபர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்ததை இளைஞர்கள் கொண்டாடினர்.
இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
இளைஞர்களின் இந்த மோசமான செயலுக்கு பெண்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை நந்திதா சங்கரா : மாடல் அழகியும், நடிகையுமான நந்திதா சங்கரா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக திருச்சூரிலிருந்து எர்ணாகுளத்துக்கு கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் இரு வாரத்திற்கு முன் சென்றிருந்தார்.அப்போது அவரது அருகில் பயணித்த இளைஞர் ஒருவர் அவரை உரசிக்கொண்ட வந்துள்ளார். இந்த நபரின் செய்கையால் எரிச்சல் அடைந்த அந்த நடிகை சற்று நகர்ந்து அமர்ந்தார்.
ஓடும் பேருந்தில் : அப்போதும் அந்த நபர் பேருந்து என்று கூட பார்க்காமல், திடீரென தனது பேன்ட் ஜிப்பைத் திறந்து அந்தரங்க உறுப்பை காட்டி உள்ளார். இதனால் பொறுமையை இழந்த அந்த நடிகை, போனை கையில் வைத்து வீடியோ எடுத்துக்கொண்டே அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், பேருந்தே களேபரமானது. இதையடுத்து, நடத்துநர் பேருந்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அப்போது, நடத்துநரை தள்ளிவிட்டு அந்த நபர் தப்பி ஓடினார்.
பாராட்டு : இந்த சம்பவம் குறித்து நெடும்பாசேரி போலீஸார் வழக்கு பதிவு விசாரித்து அந்த இளைஞரை சிறையில் அடைத்தனர். மேலும், பேருந்தில் அசிங்கமாக நடந்து கொண்ட நபரிடம் தைரியமாக சண்டை போட்ட நடிகையும், அவருக்கு உறுதுணையாக இருந்த கே.எஸ்.ஆர்.டி.சி அங்கமாலி யூனிட்டின் நடத்துனர் பிரதீப்பையும், கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ பாராட்டு இருந்தார்.
மாலை போட்டு வரவேற்ற இளைஞர்கள் : இதையடுத்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நபருக்கு சிறை வாசலிலேயே மாலை அணிவித்து, இனிப்பு கொடுத்து கேரள ஆண்கள் சங்கத்தினர் வரவேற்றனர். மேலும், சூப்பர் என்றும், கவலைப்படாதீங்க நாங்கள் இருக்கிறோம் என்றும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இணையத்தில் வெளியான இந்த வீடியோவைப் பார்த்த பெண்கள் இதெல்லாம் ரொம்ப அநியாயம் என்றும், அவன் என்ன தேசத்திற்காகவா சிறைக்கு சென்றார் என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர். சோஷியல் மீடியாவில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications