twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கார்ப்பரேட் ஒடிடிக்கள் எதுக்கு? நாங்களே சொந்தமா ஆரம்பிக்கிறோம்.. கேரள அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

    |

    திருவனந்தபுரம்: அமேசான், நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜி5 என ஏகப்பட்ட ஒடிடி தளங்கள் இயங்கி வருகின்றன.

    சில சின்ன சின்ன பிரைவேட் ஒடிடி தளங்களும் செயல்படத் தொடங்கி உள்ளன.

    இதயத்தில் பிரச்சினை.. உயிருக்கு போராடும் 5 வயது சிறுவன்.. அவசர ஹார்ட் சர்ஜரிக்கு உதவுங்கள் ப்ளீஸ்

    இந்நிலையில், கேரளாவில் அரசே புதிய ஒடிடி தளம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

    பிரபல OTT நிறுவனத்தின் வெப் தொடரில் நடிக்கவுள்ளாரா SJ சூர்யா!? பிரபல OTT நிறுவனத்தின் வெப் தொடரில் நடிக்கவுள்ளாரா SJ சூர்யா!?

    பெரிய பிசினஸ்

    பெரிய பிசினஸ்

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அந்த இடைவெளியை நன்றாக பயன்படுத்திக் கொண்டு உலகளவில் பெரிய பிசினஸை ஒடிடி தளங்கள் நடத்தி வருகின்றன. ஒரே ஒரு ஒடிடி தளம் மூலம் உலகின் 192 நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் புதிய படத்தை வெளியிட முடிகிறது.

    கார்ப்பரேட் கம்பெனிகள்

    கார்ப்பரேட் கம்பெனிகள்

    அமேசான், நெட்பிளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜி5, சோனி லைவ் என ஏகப்பட்ட ஒடிடி தளங்கள் உலகம் முழுவதும் திரைத்துறையை தங்கள் கைகளுக்குள் அடக்கி நல்ல லாபம் சம்பாதித்து வருகின்றன. அவர்கள் நிர்ணயிக்கும் விலையை கொடுத்து புதிய படங்களை விற்க தயாரிப்பாளர்களும் தயாராகி விட்டனர்.

    டாப் நடிகர்களும்

    டாப் நடிகர்களும்

    சிறு பட்ஜெட் படங்களை முதலில் வாங்கி வெளியிட்டு வந்த ஒடிடி நிறுவனங்கள் தங்களுக்குள் இருக்கும் போட்டி காரணமாகவும் தியேட்டர்கள் திறக்கப்படாத சூழலை பயன்படுத்திக் கொண்டு பிசினஸை வளர்க்க முன்னணி நடிகர்கள் படங்களையும் வாங்கி வெளியிட்டு வருகின்றன. தியேட்டர்கள் திறப்புக்காக காத்திருக்க முடியாமல் முன்னணி நடிகர்களும் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை புரிந்துக் கொண்டு வேறு வழியில்லாமல் ஒடிடிக்கு மாறி வருகின்றனர்.

    அரசு ஒடிடி

    அரசு ஒடிடி

    கேரளாவின் புதிய சினிமா மற்றும் கலாச்சார அமைச்சர் சாஜி செரியன் புதிய ஒடிடியை அரசே தொடங்கப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். சிறு பட்ஜெட் படங்களை காப்பாற்ற ஒடிடிக்கள் உதவுவதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகவும், உச்ச நடிகர்களின் படங்கள் விரும்பினால் அரசு ஒடிடியில் வெளியிடலாம் என்றும் கூறியுள்ளார்.

    மோகன்லால், பிருத்விராஜ்

    மோகன்லால், பிருத்விராஜ்

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லாலின் த்ரிஷ்யம் 2 இந்த ஆண்டு அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஜூலை 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள பிருத்விராஜின் கோல்ட் கேஸ் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிநடை போடுகிறது.

    தியேட்டர்கள் திறக்கப்படும்

    தியேட்டர்கள் திறக்கப்படும்

    அரசின் சித்ராஞ்சலி ஸ்டூடியோ சீரமைக்கப்பட்டு தென்னிந்திய சினிமா படங்களின் படப்பிடிப்புகள் நடத்தும் அளவுக்கு மேம்படுத்தப் படும் என்றும் கூறிய அமைச்சர், விரைவில் கேரளாவில் தியேட்டர்களும் திறக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கி வருவதால், வரும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Kerala Minister Saji Cherian announces Government to launch new OTT platform for Malayalam small budget films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X