இளையராஜா - கேரள அமைச்சர் அவதூறு!

By Staff

Ilayaraja
கேரள பாடலாசிரியர் ஒருவரைப் பற்றி இசைஞானி இளையராஜா சமீபத்தில் பேசியதற்கு அம்மாநில அமைச்சர் பேபி அதிருப்தி தெரிவித்துள்ளார். ராஜாவுக்கு மறதி நோய் என அவதூறாகவும் பேசியுள்ளார்.

பழஸி ராஜா என்ற மலையாளப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அந்தப் பாடல்கள் பெரும் வெற்றியடைந்துள்ளன. இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இளையராஜா பங்கேற்றுப் பேசினார்.

அப்போது படத்துக்கு பாடல் எழுதிய மலையாளக் கவிஞர் ஓ.என்.வி.குரூப், உணர்ச்சியற்ற வரிகளை எழுதித்தர, அதை அந்தப் படத்தின் தன்மைக்கேற்ப உணர்ச்சிப்பூர்வமாக தான் மாற்றியது குறித்து விவரித்தார். இத்தனைக்கும் அவர் தவறாக அந்தக் கவிஞர் பற்றிச் சொல்லவில்லை. கவிஞர்கள் படத்தின் தன்மைக்கேற்ப பாடல்களை எழுத வேண்டும் என்று கூறினார்.

உடனே, சக மலையாளிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்துவிட்டார் அமைச்சர் பேபி.

அவர் கூறுகையில், "ஓ.என்.வி.குரூப்பும் பெரிய சாதனையாளர்தான். இதை மறந்துவிட்டாரா இளையராஜா? ஒருவேளை இளையராஜாவுக்கு மறதிநோய் இருக்கலாம். இதனால்அவர் பழசிராஜா பாடல்கள் குறித்து விமர்சனம் எழுப்பி இருக்கலாம். இது நல்லதல்ல..." என்றெல்லாம் கூறியுள்ளார்.

இந்தப் படத்துக்கு இசை இளையராஜா என்பதையும், அவர் இசையால்தான் நாடகத்தனம் மிக்க இந்தப் படமே உயிர்ப்புடன் திகழ்வதாக வெளிநாட்டு ரசிகர்கள் பாராட்டியுள்ளதையும் மறந்துவிட்ட பேபிக்கு என்ன நோயோ!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X