twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவுக்கான கட்டுப்பாடு தளர்வு.. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை ஆரம்பிக்க அனுமதி.. ஆனா, 5 பேர்தான்!

    By
    |

    திருவனந்தபுரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சினிமாதுறையின், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளைத் தொடங்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மன் உட்பட பெரும்பாலான நாடுகளில் இதன் பாதிப்பு பயங்கரமாக இருக்கிறது.

    இந்த உயிர்கொள்ளி வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சியில் இருக்கின்றன.

    ஏன் என்னாச்சு? பிரபல சின்னத்திரை நடிகை விவாகரத்து.. காதல் கணவரை பிரிந்தார்.. ரசிகர்கள் அதிர்ச்சி! ஏன் என்னாச்சு? பிரபல சின்னத்திரை நடிகை விவாகரத்து.. காதல் கணவரை பிரிந்தார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

    அதிகரித்து வருகிறது

    அதிகரித்து வருகிறது

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்த வைரஸ் தொற்றால் சுமார் 1,500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, லாக்டவுன் பிறபிக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

    லாக்டவுன்

    லாக்டவுன்

    இருந்தும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களினின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் மே 3 ஆம் தேதி விதிக்கப்பட்டிருந்த லாக்டவுனை மத்திய அரசு 17 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்தால், லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    சினிமா படப்பிடிப்பு

    சினிமா படப்பிடிப்பு

    இந்த லாக்டவுன் காரணமாக, பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களின் வாழ்வாதாரம் சிக்கலாகி உள்ளது. சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதால், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் வீடுகளில் சும்மா இருக்கின்றனர். படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் வேலைகளும் நிறுத்தப்பட்டன.

    போஸ்ட் புரொடக்‌ஷன்

    போஸ்ட் புரொடக்‌ஷன்

    இந்நிலையில் கேரளாவில் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு தளர்த்தி உள்ளது. சினிமாவுக்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்தி உள்ளது. இதனால் திங்கட்கிழமையில் இருந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை ஆரம்பித்துக்கொள்ளலாம் என்று கேரள அமைச்சர் ஏ.கே.பாலன் தெரிவித்துள்ளார்.

    பின்னணி இசை

    பின்னணி இசை

    அதிகப்பட்சமாக 5 பேர் மட்டுமே சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, டப்பிங், பின்னணி இசை அமைப்பு, சவுண்ட் மிக்சிங் உள்ளிட்ட பணிகளை சில மலையாள சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் திங்கட்கிழமை தொடங்க உள்ளன. மோகன்லால், மம்மூட்டி, மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

    Read more about: post production kerala cinema
    English summary
    Kerala Minister A K Balan said that the post production works in cinema industry can be resumed from May 4, involving a maximum of 5 persons.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X