Don't Miss!
- News
மெல்ல உயரும் கொரோனா... உலகம் முழுவதும் ஒரே நாளில் 740,209 பேர் பாதிப்பு
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கேரள நடிகை மர்மமான முறையில் மரணம்...கொலையா? கணவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
கோழிக்கோடு : கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த சஹானா என்பவர் முழுநேர மாடலாகவும் சிறிய கதாபாத்திரங்களில் அவ்வப்போது படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் பாத்ரூம் ஜன்னலருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணம் கேரள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கே.ராஜன்
மற்றும்
பயில்வான்
ரங்கநாதன்...
யாராக
இருந்தாலும்
இந்த
ஒன்றை
ஃபாலோ
பண்ணுங்க,விமல்
பேட்டி

கேரள மாடல்
கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் சஹானா. இவர் முழுநேர மாடலாக இருந்துள்ளார். நகைக்கடை விளம்பரங்களுக்கு இவர் நடித்து வந்துள்ளார். இதேபோல கேரள சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களிலும் இவர் நடித்து வந்துள்ளார். இவருக்கு 21 வயதாகும் நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் சஜ்ஜித் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

டார்ச்சர் செய்த கணவர்
இதையடுத்து இருவரும் கோழிக்கோட்டில் வசித்து வந்துள்ளனர். திருமணத்தின்போது சஜ்ஜத் வெளிநாட்டில் வேலை செய்து வந்ததாகவும் ஆனால் தற்போது இருவரும் இணைந்து கோழிக்கோட்டில் வாழ்ந்து வந்ததாகவும் சஹானாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். முன்னதாக சஜ்ஜத் மற்றும் அவரது பெற்றோர், சகோதரி ஆகியோர் சஹானாவிற்கு தொடர்ந்து தொல்லை கொடுதது வந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பெற்றோர் அறிவுறுத்தல்
திருமணத்தின்போது கொடுக்கப்பட்ட 25 சவரன் நகைகளையும் சஜ்ஜத்தின் குடும்பத்தினர் செலவு செய்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து சஹானாவிற்கு வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாகவும் அதனால் அவர்களை தனிக்குடித்தனம் செல்ல தான் அறிவுறுத்தியதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

பணம் கேட்டு டார்ச்சர்
இதையடுத்து கணவருடன் அதே பகுதியில் சஹானா தனிக்குடித்தனம் சென்றதாகவும் ஆனால் தொடர்ந்து பணம் கேட்டு சஜ்ஜத் சஹானாவை டார்ச்சர் செய்ததாகவும் இந்நிலையில் நேற்றைய தினம் அவர் திடீரென தற்கொலை செய்துக் கொண்டதாக சஜ்ஜத் கூறி வருவதாகவும் அவரது பெற்றோர் மேலும் கூறியுள்ளனர்.

பெற்றோர் புகார்
சஜ்ஜத்தின் டார்ச்சர் தாங்காமல்தான் சஹானா உயிரிழந்திருக்க வேண்டும் என்றும் அவர் தற்கொலை செய்துக் கொண்டிருக்க மாட்டார் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். சஜ்ஜத் தன்னை தொடர்ந்து கொடுமை செய்து வந்ததாக முன்னதாக சஹானா தங்களிடம் கூறி அழுததாகவும் சஹானாவின் பெற்றோர் மேலும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மர்மமான முறையில் மரணம்
சஹானா நேற்றைய தினம் பாத்ரூம் ஜன்னலருகே மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பாத்ரூமில் பிளாஸ்டிக் கயிறு ஒன்றை கண்டெடுத்ததாகவும் இதுகுறித்து அவரது கணவர் சஜ்ஜத்திடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளனர்.

திரையுலகினர் வருத்தம்
விரைவில் இந்த மரணத்தின் மர்மம் விலகும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே சஹானாவின் மர்ம மரணம் கேரள திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது சாவிற்கு சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.