»   »  கடத்தி மானபங்கம்: 2 வாரம் கழித்து இன்ஸ்டாகிராமில் மவுனம் கலைத்தார் நடிகை

கடத்தி மானபங்கம்: 2 வாரம் கழித்து இன்ஸ்டாகிராமில் மவுனம் கலைத்தார் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: அந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு மலையாள நடிகை முதன் முதலாக சமூக வலைதளத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பியபோது காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடிகை

நடிகை

அந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு பிறகு நடிகை அது பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். போலீசாரிடம் மட்டும் நேரில் வாக்குமூலம் அளித்தார்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

நடிகை தனக்கு நேர்ந்த கொடுமைக்கு பிறகு முதல்முறையாக பேசியுள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவருக்கு இரண்டு இன்ஸ்டாகிராம் கணக்குகள் உள்ளன.

கருத்து

கருத்து

வாழ்க்கை என்னை சில முறை வீழ்த்தியுள்ளது, நான் கற்பனை கூட செய்யாதவற்றை காட்டியுள்ளது. ஆனால் நான் அதை எல்லாம் சந்தித்து கடந்து வருவேன் என நடிகை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

 ஆதரவு

ஆதரவு

நடிகை தற்போது ப்ரித்விராஜின் ஆதம் படத்தில் நடித்து வருகிறார். ப்ரித்விராஜ் நடிகைக்கு ஆதரவாக உள்ளார். நடிகைக்கு நடந்த சம்பவத்திற்கு பிறகு பெண்களை அவமதிக்கும் வசனங்களை இனி நான் பேசி நடிக்க மாட்டேன் என ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

English summary
Nearly two weeks after she was kidnapped and molested, an actress from the Malayalam film industry showed immense courage and took to her Instagram profile to break her silence.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil