போலீஸ்காரர் நெஞ்சில் மிதித்த சூப்பர் ஸ்டார்: முதல்வரிடம் புகார் அளித்த காவலர்கள்
திருவனந்தபுரம்: லூசிபர் படத்தில் மோகன்லால் போலீஸ்காரரை தாக்கிய காட்சிக்கு கேரள போலீசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்த லூசிபர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தின் ஒரு காட்சியில் மோகன்லால் போலீஸ்காரர் நெஞ்சில் கால் வைத்து தாக்குவார். அந்த காட்சிக்கு கேரள போலீசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கேரள போலீசார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
போலீசாரை தாக்குவது போன்ற போஸ்டர்களுக்கு எதிராக நடிவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகும். முன்பெல்லாம் குற்றவாளிகள் தான் போலீசாரை தாக்கினார்கள். ஆனால் தற்போது வாலிபர்கள் அது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஹெல்மெட் அணியாமல் இருத்தல் போன்ற காட்சிகளுக்கு அது தவறு என்று வாசகம் இருக்கும். அது போன்று போலீஸை தாக்கும் போஸ்டர்கள், காட்சிகளில் அது சட்டவிரோதமானது என்ற வாசகம் வைக்க வேண்டும் என்று போலீசார் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
போலீசார் புகார் தெரிவித்த அதே காட்சியை லாலேட்டனின் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











