“தெறி“ பாணியில்… ரவுடிகளை சுளுக்கெடுக்கும் கேரளா போலீஸ் !

கேரளா : கேரள காவல்துறையினர் அவசர உதவி எண் விளம்பரத்தில் தெறி பாணியில் ரவுடிகளை சுளுக்கெடுக்கும் வகையில் அட்டகாசமான வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

தெறி படத்துக்கும் கேரளா காவல்துறையிக்கு என்னப்பா சம்மந்தம்னு நீங்க கேட்டாலும்.

கேரளாவில் இருக்கும் தளபதியின் தீவிர ரசிகர்கள் இந்த வீடியோவை ரசித்து ரசித்து வைரலாக்கி வருகின்றனர்.

தெறி

தெறி

அட்லி இயக்கத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்த திரைப்படம் தெறி இத்திரைப்படத்தில், விஜய் நேர்மை தவறாத போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருப்பார். இந்த படத்தில், ரவுடிகளை சும்மா தூக்கிப்போட்டு பந்தாடுவார் குறிப்பா பள்ளியில் கலாட்டா செய்த ரவுடிகளை பிரம்பை வைத்து வெளுவெளுவென வெளுத்துவிடுவார். தெறி திரைப்படம் திரையரங்கில் பல நாள் ஓடி வசூலை வாசிக்குவித்து.

நாடு முழுதும் ஒரே அவசர எண்

நாடு முழுதும் ஒரே அவசர எண்

தற்போது மத்திய அரசு காவல் துறை, ஆம்புலன்ஸ், தீயணைப்பு, பெண்கள் பாதுகாப்பு என அனைத்துக்கும் 112 என்ற அவசர எண்ணைக் கொண்டு வந்துள்ளது. நாடு முழுதும் ஒரே அவசர எண்ணை உதவிக்கு அழைக்கலாம். இந்த எண் குறித்து ஒவ்வொரு மாநிலம் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

அவசர உதவி எண்

அவசர உதவி எண்

இந்நிலையில், கேரளாவில் இந்த அவசர உதவி எண் அறிமுகப்படுத்தும் வகையில் விளம்பரம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த விளம்பரத்தில போக்கிரி படத்தில் அசினும் அவரது தம்பியும் ரயிலில் பயணம் செய்யும் காட்சியை வைத்து, ரவுடிகள் பிரச்சினை செய்யும் போது அசினின் தம்பி 112 என்ற அவசர எண்ணை உதவிக்கு அழைக்கிறார்.

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

இதையடுத்து, தெறி படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக வரும் காட்சியை எடிட் செய்து வைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பீஸ்ட் திரைப்படத்தில் பட்டையை கிளப்பி வரும் அரபிக்குத்துப்பாடலின் இசை பின்னணியில் ஒளிக்க இந்த விளம்பரம் உருவாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி டிரண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X