கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் இறங்கிய நடிகை.. வீடியோ தெறிக்குதே!

கேரளம்: தமிழ்நாட்டில் எப்படி தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறதோ அதே போல் கேரளம் மாநிலத்திலும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கேரளம்மின் 16 ஆவது சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் ஒன்பதாம் தேதி நடைபெற்று, மே நான்காம் தேதி தான் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இம்முறை கேரளாவில் மும்மனைப் போட்டியாக நடைபெறுகிறது. ஆட்சியில் உள்ள் இடதுசாரி ஜனநாயக முன்னணி, எதிர்கட்சி வரிசையில் உள்ள ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனை போட்டியாக நடைபெற உள்ளது.

ஏற்கனவே கடந்த இரண்டு முறையும் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று பினராய் விஜயன் இரண்டு முறை முதலமைச்சராக ஆட்சி செய்தார். இம்முறையும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைக்க தேர்தல் களத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கேரளம் போன்ற மாநிலத்தில் கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி என இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. மத்திய ஆட்சியில் உள்ள பாஜக கேரளமிலும் ஆட்சியை பிடிக்க பல வியூகங்களை வகுத்து வந்தாலும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

Kerala Assembly elections 2026 heat up with LDF UDF and NDA in a tight race as Pinarayi Vijayan seeks a third term Actress Nikhila Vimal campaigns for LDF

நிகிலா விமல்: ஆனால் இம்முறை களம் மிகவும் பரபரப்பாக இருப்பதால் இந்த தேர்தலிலும் மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்க இடதுசாரி ஜனநாயக முன்னணி தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக நடிகை நிகிலா விமல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிரசாரம் செய்வதற்கு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் நடிகை நிகிலா விமலை பாராட்டி வருகிறார்கள்.

தமிழ்நாடு தேர்தல்: தமிழ்நாட்டிலும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இம்முறை நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் களத்தில் களமிறங்கி உள்ளதால், தமிழ்நாடு தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக மாறி உள்ளது. நடிகர் விஜய் தன்னுடன் எந்த கட்சி கூட்டணிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று அறிவித்தார். ஆனால் அவருடன் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எந்த முன்னணி கட்சியினரும் சென்று கூட்டணி வைக்கவில்லை.

விஜய்க்கு பயமா?: இதனால் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்தே போட்டியிடுகிறது. இதில் நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாலேயே திமுக அதிமுக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட களத்தில் இருக்கக்கூடிய மற்ற கட்சியினர் விஜய்க்கு தேர்தலில் வெற்றி பெறுவோமா என்ற பயம் வந்துவிட்டது அதனால் தான் அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்று விமர்சித்து வருகிறார்கள். அதே நேரத்தில் விஜய் பிரசாரத்திற்கு எங்கு சென்றாலும் ரசிகர்கள் கூட்டம் பெருமளவில் கூடிவருவதையும் பார்க்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X