twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவரை நடிக்க விடாதீங்க... விக்ரம் படத்தில் நடிக்க இளம் ஹீரோவுக்கு தடை!

    By
    |

    திருவனந்தபுரம்: ஹேர் ஸ்டைல் பஞ்சாயத்து விவகாரத்தில் மலையாள இளம் ஹீரோ ஷேன் நிகம், தமிழில் நடிக்கவும் அனுமதிக்கக் கூடாது என்று கேரள பிலிம்சேம்பர், தென்னிந்திய பிலிம்சேம்பருக்கு கடிதம் எழுதியுள்ளது.

    இளம் ஹீரோ

    இளம் ஹீரோ

    மலையாள சினிமாவின் இளம் ஹீரோ, ஷேன் நிகம். இஷ்க், கும்பளங்கி நைட்ஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ள ஷேன், வெயில், குர்பானி ஆகிய படங்களில் நடித்து வந்தார். வெயில் படத்துக்கு தலைமுடியை அதிகமாக வளர்க்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.

    மாற்றக் கூடாது

    மாற்றக் கூடாது

    படப்பிடிப்பு முடியும் வரை ஹேர்ஸ்டைலை மாற்றக் கூடாது. ஷூட்டிங் தொடங்கி நடந்துகொண்டிருந்த நிலையில், திடீரென்று தனது ஹேர்ஸ்டைலை வெட்டி, அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் நிகம்.

    தயாரிப்பாளர் அதிர்ச்சி

    தயாரிப்பாளர் அதிர்ச்சி

    இதனால் இயக்குனர் சரத் மற்றும் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் அதிர்ச்சி அடைந்தனர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார் ஜார்ஜ். பிறகு இந்தப் பிரச்னை சங்கத்தில் பேசி தீர்க்கப்பட்டது. இனி கெட்டப்பை மாற்ற மாட்டேன் என்று உறுதி அளித்திருந்தார் நிகம்.

    மீறினார்

    மீறினார்

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், தயாரிப்பாளர் சங்கத்திடம் அளித்த உறுதியை மீறி, புதிய கெட்டப்பை வெளியிட்டார் நிகம். அதில், தலைமுடியை, மண்டையின் இரண்டு பக்கமும் நன்றாக ஷேவ் செய்திருந்தார்.

    தடை

    தடை

    இதனால் ஆத்திரமடைந்த ஜார்ஜ், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மீண்டும் புகார் செய்தார். விசாரித்த சங்க நிர்வாகிகள், ஷேன் நிகமுக்குத் தடை விதித்தனர். அவர் நடித்த வெயில், குர்பானி படங்கள் கைவிடப்படுவதாகவும் அந்தப் படங்களுக்காகச் செலவழிக்கப்பட்ட ரூ.7 கோடியை ஷேன் நிகம் திருப்தித் தர வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    இந்நிலையில், இந்தப் பிரச்னையை பேசித் தீர்க்க, மலையாள நடிகர்கள் சங்கமான, அம்மாவும் கேரள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பும் முடிவு செய்தது. இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, கேரள கலாசாரத்துறை அமைச்சர் ஏ.கே.பாலனை சந்தித்துப் பேசினார் ஷேன் நிகம்.

    திட்டி பேட்டி

    திட்டி பேட்டி

    சந்திப்புக்குப் பின் பேசிய ஷேன் நிகம், தயாரிப்பாளர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல நடந்துகொள்கிறார்கள் என்று திட்டிப் பேட்டியளித்தார்.

    கடுப்பு

    கடுப்பு

    இதனால் கடுப்பான கேரள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள், இங்கு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போது, எப்படி அமைச்சரை சந்திக்கலாம் என்றும், அந்தச் சந்திப்பு பேச்சுவார்த்தையை திசைத்திருப்பும் முயற்சி என்றும் இதனால், இனி பேச்சுவார்த்தையை தொடரப்போவதில்லை என்றும் தெரிவித்தனர்.

    தடை தொடரும்

    தடை தொடரும்

    இதற்கிடையே, தயாரிப்பாளர் சங்கம், அவருக்கானத் தடை தொடரும் என்று அறிவித்தது. இன்னும் 10 நாட்களுக்குள் அவர் டப்பிங்கை பேசி முடிக்கவேண்டும். இல்லை என்றால், வேறு ஒருவர் டப்பிங் பேசுவார். அவரிடம் ரூ.7 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது.

    இதற்கிடையே, ஷேன் நிகம், தமிழில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படத்திலும் தென்னிந்திய மொழிகளிலும் அவரை நடிக்க அனுமதிக்கக் கூடாது என்று கேரள பிலிம்சேம்பர், தென்னிந்திய பிலிம்சேம்பருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    The Kerala Film Chambers have forwarded a letter to the South India Film Chambers stating that actor Shane Nigam, must not be allowed to act in other-language
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X