கேரவனில் ரகசிய கேமரா குறித்த ராதிகாவின் பேட்டி.. சிறப்பு குழு தொலைபேசி மூலம் விசாரணை?

சென்னை: கேரளாவில் வெளியிடப்பட்டுள்ள ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். திரைத்துறையில் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் பிரச்சினைகள் தொடர்பான அனுபவங்களையும் ஆதங்கங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் நடிகைகள் ராதிகா, ரஞ்சனி, குஷ்பூ உள்ளிட்டவர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ராதிகா கேரவன்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு படம் பிடிக்கப்படுவதாகவும் தான் 10 முறையாவது செக் செய்துவிட்டே கேரவனை பயன்படுத்துவேன் என்றும் ராதிகா கூறியிருந்தார்.

radhika hema committee report

ஹேமா கமிட்டி அறிக்கை: கேரளாவில் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது ஹேமா கமிட்டி அறிக்கை. கேரளாவில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் என்று அடுத்தடுத்து நடிகைகள் உள்ளிட்ட பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதன் எதிரொலியாகத்தான் கடந்த 2017ம் ஆண்டில் அங்கு பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்ததன் எதிரொலியாகவே ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டு, அதன் ரிப்போர்ட்டும் கடந்த 2019ம் ஆண்டிலேயே தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் இந்த அறிக்கை வெளியாக 5 ஆண்டுகள் பிடித்துள்ளன.

பூதாகரமான விவகாரம்: இந்த அறிக்கையை வெளியிட தடை இருந்த நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலமாகவே தற்போது இந்த விவகாரம் வெளியாகி பூதாகாரமாகியுள்ளது. பல முன்னணி நடிகர்கள், இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளாவார்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. நடிகர் ஜெயசூர்யா மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர் சித்திக், இயக்குநர் ரஞ்சித்தும் லிஸ்ட்டில் உள்ளனர். இவர்கள்மீதும் விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ராதிகா குற்றச்சாட்டு: இந்த விஷயத்தில் இதுநாள் வரையிலும் குற்றச்சாட்டுகளை கூறாத நடிகைகளும் தற்போது பேசி வருகின்றனர். நடிகைகள் ராதிகா, குஷ்பூ, ரஞ்சினி உள்ளிட்டவர்கள் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பேசிவரும் நிலையில், தான் கேரவன்களை பயன்படுத்துவதில்லை என்றும் அதில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டு, நடிகைகள் உடை மாற்றுவது படம்பிடிக்கப்படுவதாகவும் நடிகை ராதிகா நேரடியாகவே குற்றம் சாட்டியிருந்தார். அப்படி தான் கேரவனை பயன்படுத்தினாலும் ஒன்றுக்கு 10 முறை செக் செய்துவிட்டே தான் பயன்படுத்துவேன் என்றும் ராதிகா கூறியிருந்தார்.

ராதிகாவிடம் விசாரணை: மேலும் தன்னுடைய தோழியும் நடிகையுமான ஒருவர் கேரவனில் குளித்துக் கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக ஒருவர் பார்க்க முயல, தான் சுடுதண்ணீரை எடுத்து அவர்மீது ஊற்றியதாகவும் பல்வேறு சம்பவங்களை ராதிகா அடுக்கியிருந்தார். இந்நிலையில் கேரளாவில் இந்த விவகாரங்களை விசாரித்துவரும் சிறப்பு குழுவினர் ராதிகாவிடம் தொலைபேசி மூலம் விசாரணை மேற்கொண்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணையின்போது அவரிடம் எதுபோன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X