twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேரளா மாநில பிலிம் விருதுகள் - வெல்லப்போகும் நடிகர் நடிகைகள் யார்?

    |

    சென்னை: மல்லுவுட்டில் இன்று வெள்ளிக்கிழமை சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகளுக்கான மாநில விருதுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.

    இன்று மாலை 5 மணியளவில் அவ்விருதுகள் குறித்த அறிவிப்புகளும், சிறந்த நடிகர், நடிகைகள் யார் என்ற விவரங்களும் வெளிவரும்.

    கலை கலாச்சார அமைச்சர் சாஜி செரியன் அவ்விருதுகளை இன்று அறிவிப்பார் எனத் தகவல்கள் கூறுகின்றன.

    என்ன சார் உதயநிதி ஸ்டாலினுடன் போட்டியா? .. அண்ணாமலைக்கு நெட்டிசன்கள் கேள்வி!என்ன சார் உதயநிதி ஸ்டாலினுடன் போட்டியா? .. அண்ணாமலைக்கு நெட்டிசன்கள் கேள்வி!

    மம்மூட்டியா ? மோகன்லாலா?

    மம்மூட்டியா ? மோகன்லாலா?

    இவ்வாண்டு மாநில விருதுகளில் ஒரு சிறப்பு என்னவென்றால், மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டியும், மோகன்லாலும் போட்டியில் உள்ளனர். 'ஒன்' மற்றும் 'பிரீஸ்ட்' திரைப்படத்திற்காக மம்மூட்டியும், 'திரிஷ்யம் 2' படத்திற்காக மோகன்லாலும் நாமினேசனில் இடம்பெற்றிருக்கின்றனர். அதேவேளையில், காவல் திரைப்படத்திற்காக சுரேஷ் கோபியும் நாமினேஷனில் இருக்கிறார்.

    வாரிசுகளிலும் போட்டி

    வாரிசுகளிலும் போட்டி

    தந்தைகளோடு அவர்களின் வாரிசுகளும் விருதுகளுக்கான பரிந்துரைகளில் இடம்பெற்றிருக்கின்றனர். மம்மூட்டி மகன் துல்கர் சல்மானும், மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லாலும் பல்வேறு பிரிவுகளில் நாமினேசனில் இடம்பெற்றிருக்கின்றனர். பிரணவ் அண்மையில் நடித்த ஹிருதயம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கும் நிலையில், கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடித்த 'குரூப்' அவரை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. இவர்களோடு, பிரித்திவிராஜ் சுகுமாறன், குரு சோமசுந்தரம், டோவினோ தாமஸ், ஃபகத் பாசில் ஆகியோரும் நாமினேசனில் இருக்கின்றனர்.

    நடிகைகளில் யார்?

    நடிகைகளில் யார்?

    மஞ்சு வாரியார், பார்வதி, நிமிஷா சஜயன், ரஜிஷா விஜயன் என மலையாள சினிமாவைக் கலக்கி வரும் நடிகைகள் பலர் நாமினேஷனில் உள்ளனர். தமிழில் தனுஷுடன் அசுரன் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட மஞ்சு வாரியார், மலையாளத்தில் கடந்த ஆண்டு 'தி பிரீஸட்' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். அதே போல் தமிழில் தனுஷுடன் 'மரியான்' திரைப்படத்தில் நடித்த பார்வதி மலையாளத்தில் கடந்த சில வருடங்களாக உயரே, வைரஸ், ஆணும் பெண்ணும் என பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தமிழில் மீண்டும் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்தில் நடித்து வருகின்றார்.

    சாயிட் அக்தார் தலைமையில் ஜூரி

    சாயிட் அக்தார் தலைமையில் ஜூரி

    பாலிவுட் இயக்குநர் மற்றும் திரைக்கதையாசிரியர் சாயிட் அக்தார் மிஸ்ரா தலைமையிலான குழு நாமினேசனில் இடம்பெற்ற 142 திரைப்படங்களையும் பார்த்து, அவற்றில் 45 திரைப்படங்களை இறுதிச்சுற்றுக்கு அனுப்பியிருக்கிறது. அவற்றில் இருந்து சிறந்த படைப்புகள் தேர்வுச் செய்யப்பட்டு 52-வது கேரளா மாநில விருதுகளில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அறிவிக்கப்படும்.

    English summary
    Kerala State Film Awards: Who are in the Race to Win the Titles?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X