வகுப்பறையில் ஸ்ரீவள்ளி பாடலை பாடிய மாணவர்கள்... கேரள டீச்சரின் வேற லெவல் முயற்சி

திருவனந்தபுரம் : அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமாரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான புஷ்பா படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சிறப்பாக காணப்படுகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

புஷ்பா படம்

புஷ்பா படம்

சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் இந்திய அளவில் வரவேற்பையும் வசூலையும் குவித்துள்ளது. இந்தப் படம் சர்வதேச அளவில் ரசிகர்களின் மற்றும் பிரபலங்களின் விருப்பத்திற்குரிய படமாக உள்ளது. மேலும் பாடல்களும் ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

வரவேற்பை பெற்ற பாடல்கள்

வரவேற்பை பெற்ற பாடல்கள்

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ஸ்ரீவள்ளி, சாமி மற்றும் ஊ சொல்றியா பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளன. சுகுமார் இயக்கத்தில் பாடல்களின் காட்சி அமைப்பும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல்களுக்கு பிரபலங்களும் ஆட்டம் போட்டு வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

கெட்டப்பை மாற்றிய அல்லு அர்ஜுன்

கெட்டப்பை மாற்றிய அல்லு அர்ஜுன்

குறிப்பாக படத்தில் ஸ்ரீவள்ளி பாடல் அல்லு அர்ஜுனின் சிறப்பான நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் இம்மாதத்தில் சூட்டிங் துவங்கவுள்ளது. படத்தில் தன்னுடைய கெட்டப்பை முற்றிலும் மாற்றிக் கொண்டு அல்லு அர்ஜுன் அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளார்.

வசூல் குவிப்பு

வசூல் குவிப்பு

சிகப்பு சந்தன மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவான நிலையில் திரைக்கதை, காட்சி அமைப்புகள் அனைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, இந்தி என வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் வசூலை இந்தப் படம் வாரிக்குவித்துள்ளது.

மாணவர்கள் பாடிய ஸ்ரீவள்ளி பாடல்

மாணவர்கள் பாடிய ஸ்ரீவள்ளி பாடல்

அனைவரையும் இந்தப் படத்தின் பாடல்கள் கவர்ந்த நிலையில், தற்போது கேரளாவில் இந்தப் படத்தின் ஸ்ரீவள்ளி பாடலை மாணவர்களை பாட வைத்த ஆசிரியை கவனத்தை கவர்ந்துள்ளார். அவர் பாடங்களை மாணவர்கள் நோட்ஸ் எடுக்கும்போதே இந்த பாடலையும் பாடவைத்துள்ளார்.

ஆசிரியை செய்த செயல்

ஆசிரியை செய்த செயல்

இந்த வீடியோவை அவர் பேஸ்புக்கில் பதிந்த நிலையில் அவருக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் பாடலுடன் கூடிய பாடத்தால் மாணவர்கள் ரிலாக்சாக உணர்ந்ததாகவும் அவர்கள் அதிகமாக கவனம் செலுத்த முடிந்ததாகவும் அந்த ஆசிரியை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X