ப்ரீ ரிலீஸ் பிஸ்னஸில் அசத்தும் LEO... கேரளாவில் பல கோடிகளுக்கு விற்பனையான தியேட்டர் ரைட்ஸ்
காஷ்மீர்: விஜய்யின் லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ள லியோ படத்தின் ஓடிடி, சாட்டிலைட் ரைட்ஸ் ஏற்கனவே விற்பனையாகிவிட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது படப்பிடிப்பு முடியும் முன்பே தியேட்டர்ஸ் ரைட்ஸ் பிசினஸும் பல கோடிகளுக்கு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேகமெடுத்த லியோ ஷூட்டிங்
விஜய்யின் வாரிசை தொடர்ந்து தற்போது நடித்து வரும் லியோ திரைப்படமும் இந்தாண்டு வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்ஷன் ஜானர் படமாக உருவாகும் லியோ ஷூட்டிங், காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. முன்னதாக சென்னையில் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங், பூஜையை முடித்த படக்குழு, அதன்பின்னர் மொத்தமாக ஒரே விமானத்தில் காஷ்மீர் பறந்தது. விஜய், லோகேஷ் கனகராஜ் உட்பட மொத்த லியோ டீமும் காஷ்மீரில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ப்ரீ ரிலீஸ் பிஸ்னஸில் அதகளம்
லியோ டைட்டில் ப்ரோமோவுடன் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இந்தப் படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் ரிலீஸாகும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் இப்போதே தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. முக்கியமாக கேரள தியேட்டர் ரைட்ஸ் இதுவரை இல்லாத அளவிற்கு பல கோடிகளுக்கு விற்பனையாகும் என தெரிகிறது.

கேரளாவில் விஜய்யின் மார்க்கெட்
ஏற்கனவே விஜய்யின் திரைப்படங்கள் கேரளாவில் சக்கைப் போடு போட்டு வருகின்றன. தமிழ்நாட்டை கடந்து விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் கேரளாவில் தான். அதனால், லியோ படத்தின் தியேட்டர் ரைட்ஸுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இறுதியாக லியோ தியேட்டர் ரைட்ஸ் 16 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டு வருகிறதாம். இப்போதே இப்படியென்றால் லியோ டீசர் வெளியானால், இன்னும் அதிகமாகும் எனக் கூறப்படுகிறது.

ரிலீஸுக்கு முன்பே 250 கோடி
இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி ஏற்கனவே வாங்கிவிட்டது. அதேபோல் ஓடிடி ரைட்ஸ் நெட்பிளிக்ஸ் வசம் சென்றுவிட்டது. லியோ சாட்டிலைட் உரிமையை 80 கோடிக்கும், ஓடிடி ரைட்ஸ் 150 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளதாம். மேலும் மியூசிக் ரைட்ஸ் 16 கோடிக்கும் விற்பனையானதாக சொல்லப்படுகிறது. ஆகமொத்தம் லியோ திரைப்படம் ரிலீஸாகும் முன்பே 246 கோடி வரை பிஸினஸ் செய்து கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 250 கோடி ரூபாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரம் கோடி ரேஸில் லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் 500 கோடிக்கும் மேல் வசூலித்தது. முக்கியமாக ஓடிடி ஸ்ட்ரீமிங்கிலும் இந்தப் படம் சாதனை படைத்தது. இதனால் தான் லியோ படத்தின் சாட்டிலைட், ஓடிடி ரைட்ஸ் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளதாம். ப்ரீ-ரிலீஸ் பிஸினஸில் 200 கோடியை கடந்த லியோ, தியேட்டரில் ஆயிரம் கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் LCU கான்செப்ட்டில் உருவாகினால், இனி அடுத்து லோகேஷ் இயக்கும் படங்களுக்கும் பல கோடிகளில் பிஸினஸ் நடக்கும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











