twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேரளா நட்சத்திரங்களிடம் காணப்படும் இந்த தேசபக்தி.. தமிழக நடிகர்கள் இடையே இல்லையே, ஏன்?

    |

    சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் தேசியக் கொடியை சமூக வலைதளங்களில் டிபியாக வைக்க பிரதமர் மோடி கோரிக்கை வைத்த நிலையில், கேரள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அதை பின்பற்றி உள்ளனர்.

    ஆனால், கோலிவுட்டில் பல சினிமா பிரபலங்களும் அதை கடைபிடிக்கவே இல்லை.

    இந்நிலையில், கோலிவுட் நடிகர்களுக்கு தேசபக்தியே இல்லையா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

    'கடாவர்’ 4 ஆண்டு கடினமான பணி..மார்ச்சுவரி டெக்னிஷ்யனாக நடிக்க கடுமையான ஹோம்வர்க் செய்தோம்..அமலாபால்! 'கடாவர்’ 4 ஆண்டு கடினமான பணி..மார்ச்சுவரி டெக்னிஷ்யனாக நடிக்க கடுமையான ஹோம்வர்க் செய்தோம்..அமலாபால்!

    மோடி கோரிக்கை

    மோடி கோரிக்கை

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாட்டு மக்கள் அனைவரும் தேசியக் கொடியை டிபியாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் வைக்க பிரதமர் மோடி கோரிக்கை வைத்தார். தனது ட்விட்டர் பக்கத்திலும், தேசியக் கொடியை டிபியாக அவர் மாற்றி உள்ளார்.

    கேரள நடிகர்களிடம் தேசபக்தி

    கேரள நடிகர்களிடம் தேசபக்தி

    பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கேரள நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி, பாடகி சித்ரா, உன்னி முகுந்தன் உள்ளிட்ட ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் தங்களது டிபியாக தேசியக் கொடியை வைத்துள்ளனர். மேலும், இந்தியன் என கூறிக் கொள்வதில் பெருமைக் கொள்கிறேன் என்கிற வாசகத்தையும் கேப்ஷனாக வைத்துள்ளனர்.

    கோலிவுட்டில் கொடியே காணோம்

    கோலிவுட்டில் கொடியே காணோம்

    ஆனால், கோலிவுட்டில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, இயக்குநர் பார்த்திபன், சிவகார்த்திகேயன், தனுஷ் என எந்தவொரு முன்னணி நடிகர்களும் தேசியக் கொடியை டிபியாக வைக்கவே இல்லை. சமூக வலைதளங்களில் பிரதமர் பேச்சுக்கு கோலிவுட் பிரபலங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. தேசியக் கொடியை டிபியாக வைத்தால், என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    குஷ்பு டிபி

    குஷ்பு டிபி

    நடிகை குஷ்பு, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பாஜகவினர் மட்டுமே தங்களது சமூக வலைதள பக்கங்களில் தேசியக் கொடியை டிபியாக வைத்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாட உள்ள நிலையில், கோலிவுட்டில் இருந்து முன்னணி நடிகர்கள், தேசப்பற்றுக் கொண்டவர்கள் ஏன் மோடியை பிரதமராக பார்க்காமல் பாஜகவினராக பார்க்கின்றனர் என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளனர்.

    Recommended Video

    Flag DP | 'சித்தாந்தத்தை ஒதுக்கி வைங்க' - வானதி சீனிவாசன் *Politics | Oneindia Tamil
    பாலிவுட்டில் என்ன நிலவரம்

    பாலிவுட்டில் என்ன நிலவரம்

    கோலிவுட்டை பாலிவுட் நிலைமை மேலும் மோசமாக உள்ளது. ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான் என எந்தவொரு கான் நடிகர்களும் தங்களது டிபியில் தேசியக் கொடி படத்தை வைக்கவில்லை. அமிதாப் பச்சன், தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கிய விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி கூட வைக்கவில்லை. ஆனால், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அக்‌ஷய் குமார் மற்றும் அஜய் தேவ்கன் தேசியக் கொடியை டிபியாக வைத்துள்ளனர். ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்ட நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் தேசியக் கொடியை டிபியாக வைத்துள்ளார்.

    English summary
    Kerala top actors like Mohanlal, Mammootty and others changed their dp's into National Flag. But, Kollywood top actors like Rajinikanth, Kamal Haasan, Vijay, Suriya and others won't accept Prime Minister Modi's request.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X