விமான நிலையத்தில் விஜய்சேதுபதியை தாக்க முயன்ற நபர் யார் தெரியுமா? அதிரடியாக கைது செய்த போலீசார்!

சென்னை: விமான நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதியை மர்ம நபர் ஒருவர் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

Recommended Video

Vijaysethupathi-யை தாக்கியது யார்? | Bangalore Airport, Puneeth Rajkumar Samadhi

அந்த நபரை பெங்களூரு போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், என்ன காரணத்திற்காக அந்த நபர் விஜய்சேதுபதியை தாக்க முயன்றார் என்பது குறித்த விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார்.

விஜய்சேதுபதியை தாக்க முயற்சி

விஜய்சேதுபதியை தாக்க முயற்சி

பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாவலர்கள் மற்றும் உதவியாளர்களுடன் சினிமா படப்பிடிப்புக்காக நடிகர் விஜய்சேதுபதி சென்று கொண்டிருந்த நிலையில், இளைஞர் ஒருவர் ஓடி வந்து விஜய்சேதுபதியை எட்டி உதைக்க முயலும் வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் பரபரப்பை கிளப்பியது.

காரணம் தெரியவில்லை

காரணம் தெரியவில்லை

விஜய்சேதுபதி தாக்கப்பட்டாரா? என்றும் மக்கள் செல்வனை என்ன நோக்கத்திற்காக அந்த இளைஞர் தாக்க முற்பட்டார் என்றும் ஏகப்பட்ட கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. விஜய்சேதுபதியின் ஹேட்டர்கள் தான் இந்த வேலையை செய்து இருப்பார்கள் என்றும் கூறப்பட்டன. இந்நிலையில், அங்கே என்ன நடந்தது என்பது முழுவதும் போலீசார் விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

கைது செய்த போலீசார்

கைது செய்த போலீசார்

விஜய்சேதுபதியை இளைஞர் தாக்க முற்பட்ட நிலையில், நடிகர் விஜய்சேதுபதியை பாதுகாவலர்கள் பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். விமான நிலையத்தில் இந்த சம்பவத்தை நேரடியாக பார்த்து வீடியோ எடுத்த சிலர் அதனை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்க தகவல் அறிந்த காவல் துறை பெங்களூரு போலீசாருக்கு அந்த நபரை கைது செய்ய உத்தரவிட பெங்களூரு போலீசார் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

யார் அந்த நபர்

யார் அந்த நபர்

பெங்களூரு போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் கேரளாவை சேர்ந்த ஜான்சன் என்றும் குடிபோதையில் அவர் இருந்தார் என்றும் தெரியவந்துள்ளது. விஜய்சேதுபதியுடன் செல்ஃபி எடுக்க முற்பட்டபோது குடிபோதையில் இருப்பதால் அவரது உதவியாளர் அந்த நபரை அனுமதிக்கவில்லை என்றும் அதன் காரணமாக அந்த உதவியாளரை தான் தாக்க முற்பட்டதாகவும் இந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் அந்த இளைஞர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

சொல்வது உண்மையா

சொல்வது உண்மையா

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜான்சன் மீது வழக்கு பதிந்துள்ள போலீசார் அவர் சொல்வது உண்மையா என்றும் இல்லை வேறு ஏதாவது உள் நோக்கம் இருந்ததா? என்கிற ரீதியிலும் தொடர்ந்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X