கேரள இளைஞர்கள் உருவாக்கிய லவ் பிரேக்கப் தமிழ் பாடல்.. ஹரிசரண் குரலில் வைரலாகும் ‘தூரிகா’!
சென்னை: தமிழ் வாசமும் தமிழ் வார்த்தைகளும் இல்லாத மலையாள திரைப்படங்களே அரிது என்று சொல்லும் அளவுக்கு கேரள மக்களிடம் தமிழ் நிறைந்திருக்கிறது.
இந்நிலையில் அதற்கு இன்னுமொரு உதாரணமாக கேரள இளைஞர்கள் உருவாக்கிய தூரிகா பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஹரிசரண் குரலில் நிரஞ்சன் பாரதி வரிகளில் உருவாகி உள்ள இந்த பாடலில் ஸ்வேதா மற்றும் சபீப் நடித்துள்ளனர்.

ஹரிசரண் குரலில்
காதல் படத்தில் உனக்கென இருப்பேன் என பாட ஆரம்பித்து பையாவில் துளி துளி துளி மழையாய் வந்த அதே ஹரிசரணின் குரலில் இன்னுமொரு இன்பமான பாடலாய் தூரிகா பாடல் காதுகளில் ரீங்காரமிடுகிறது.

லவ் பிரேக்கப்
மலையாள திரையுலகின் இசையமைப்பாளரான அயாஸ் இஸ்மாயில் இசையில் ஸ்வேதா மனோஜ் மற்றும் ஹபீப் சாஹிர் இணைந்து காதல் மற்றும் காதல் பிரிவு வலிகளை நினைத்து உருகும் லவ் பிரேக்கப் பாடலாக இந்த தூரிகா வீடியோ ஆல்பம் உருவாகி இளைஞர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

கேரள இளைஞர்கள்
"தூரிகா வா வா.. காதலை தா தா.." என அட்டகாசமான காதல் வரிகளை பாடலாசிரியர் நிரஞ்சன் பாரதி எழுதி உள்ளார். இந்த வீடியோ ஆல்பம் பாடலை ஆஃப்வின் லெபோஸ்கி இயக்கி உள்ளார். ஹிமால் மோகன் ஒளிப்பதிவில் ஹரி தேவகி எடிட் செய்துள்ளார்.
டிரெண்டாகி வருகிறது
ஹரிசரண் குரலில் உருவாகி உள்ள இந்த "தூரிகா வா வா" பாடல் ஜூன் 18ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. படுக்கையறை காட்சிகள், புகைப்பிடித்தல், என படு போல்டாக இந்த பாடலில் நடிகை ஸ்வேதா மிரட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











