கேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்: சவாலை ஏற்க நீங்க ரெடியா?
Recommended Video

சென்னை: கேரள மக்களுக்கு உதவி செய்ய முன்வருமாறு நடிகர் சித்தார்த் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
கேரளாவில் பெய்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றது. கேரள மக்களுக்கு பிற மாநில மக்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
நடிகர்கள் கார்த்தி, சூர்யா, விஷால் ஆகியோர் கேரள மக்களுக்காக நிவாரண உதவி அளித்துள்ளனர்.
கேரளா
நடிகர் சித்தார்த் கேரள நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். நான் #KeralaDonationChallenge-ஐ ஏற்றுக் கொண்டேன். நீங்களும் சவாலை ஏற்கிறீர்களா என்று கேட்டு ட்வீட்டியுள்ளார் சித்தார்த்.
ஷேர்
கேரளாவில் தத்தளிக்கும் மக்களுக்கு இந்த தொடர்பு எண்கள் உதவியாக இருக்கும். முடிந்த அளவு பகிருங்கள் என்று சில தொடர்பு எண்களையும் வெளியிட்டுள்ளார் சித்தார்த். சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது ஆர்.ஜே. பாலாஜியுடன் சேர்ந்து மக்களுக்கு உதவி செய்தவர் சித்தார்த் என்பது குறிப்பிடத்தக்கது.
ரீட்வீட்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் எஸ்டிடி கோடுகளை மோகன்லால் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை சித்தார்த் ரீட்வீட் செய்துள்ளார்.
வேண்டுகோள்
தேசிய மீடியாக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா மீது கவனம் செலுத்துமாறு சித்தார்த்தும், நடிகர் துல்கர் சல்மானும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











