Keraleeyam 2023: கமல், மம்முட்டி, மோகன்லால்... ஒரே மேடையில் செம்ம கெத்து... ட்ரெண்டாகும் போட்டோ!
திருவனந்தபுரம்: கேரள அரசு சார்பில் 'கேரளம் 2023' என்ற நிகழ்ச்சி இன்று முதல் 7 நாட்கள் நடைபெறுகிறது.
திருவனந்தபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.
இதில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவருடன் மலையாள முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோரும் கலந்துகொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

வைரலாகும் கமல், மம்முட்டி, மோகன்லால் போட்டோ
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான கமல்ஹாசன், தற்போது இந்தியன் 2, கல்கி ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக ஹெச் வினோத், மணிரத்னம் ஆகியோர் இயக்கும் படங்களிலும் நடிக்கவுள்ளார். இன்னொரு பக்கம் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால் மூவரும் ஒரே மேடையில் கெத்தாக அமர்ந்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. மூன்று பேருமே வெள்ளை வேஷ்டி, சட்டை அணிந்து மாஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை சினிமா ரசிகர்கள் வேற லெவலில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நடிப்பின் அசுரர்களான கமல், மம்முட்டி, மோகன்லால் மூவரையும் ஒரே மேடையில் பார்க்க சூப்பராக இருக்கிறது என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
மெகா நடிகர்களான மூன்று பேருமே நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டோ கேரளாவின் திருவனந்தபுரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கேரள அரசு சார்பில் 'கேரளம் 2023' என்ற கலை, கலாச்சார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இதில், கேரளாவின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை கொண்டாடும் விதமாக கலை நிகழ்ச்சிகள், உணவு திருவிழாக்கள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கமல், மம்முட்டி, மோகன்லால் மூவரும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ தான் இது என்பது தெரியவந்துள்ளது. இந்நிகழ்ச்சியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார்.
கமல், மோகன்லால், மம்முட்டி ஆகியோருடன் நடிகைகள் மஞ்சு வாரியர், ஷோபனா ஆகியோரும் கேரளம் 2023 நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கமல், மம்முட்டி, மோகன்லால் மூவரையும் ஒரே போட்டோவில் பார்த்த ரசிகர்கள், இந்த காம்போ ஒரு படத்தில் இணைந்தால் எப்படி இருக்கும் எனவும் சிலாகித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











