சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் ஹைதராபாத்தில் நடந்த அந்த சம்பவம்.. இயக்குநர் சொன்ன சீக்ரெட்

சென்னை: நடிகை நயன்தாரா சினிமாவுக்கு வந்த புதிதில் முதலில் சிம்புவை காதலித்தார். அந்தக் காதல் பாதியில் முடிந்ததை அடுத்து பிரபுதேவாவை காதலித்து மதமும் மாறினார். ஆனால் அந்தக் காதலும் பிரேக் அப்பில் முடிந்தது. சூழல் இப்படி இருக்க இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அவர். இந்தச் சூழலில் சிம்பு மற்றும் நயன்தாரா குறித்து இயக்குநர் ஜிடி நந்து பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

கேரளாவில் பிறந்து வளர்ந்து மலையாள திரையுலகில் தனது திரை பயணத்தை ஆரம்பித்த நயன்தாரா; தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்ததாக ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. அந்த ஹிட்டுக்கு பிறகு நயனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அந்தவகையில் சிம்புவுடன் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்தார். அந்த சமயத்தில் இரண்டு பேரும் தீவிரமான காதலில் இருந்தார்கள்.

simbu nayanthara

ஓவர் நெருக்கம்: அந்தக் காதலின் வெளிப்பாடாக இரண்டு பேரும் அந்தப் படத்தில் படு நெருக்கமாக நடித்தார்கள். அதுவரை அப்படி ஒரு கவர்ச்சியை நயன் காட்டியதில்லை. சூழல் இப்படி இருக்க இரண்டு பேரும் தனி அறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அந்தப் புகைப்படங்கள் வெளியானதற்கு காரணம் சிம்புதான் என்று அப்போது வெளிப்படையாகவே குற்றச்சாட்டுக்கள் வந்தன. ஆனால் இருவரும் அதுகுறித்து எதுவும் பேசாமல் தங்கள் காதலை பிரேக் அப் செய்துகொண்டார்கள்.

அடுத்த காதல்: சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு வில்லு படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் பிரபுதேவாவை காதலித்தார் நயன். பிரபுவுக்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கு மாறினார். மேலும் சினிமாவிலிருந்தும் ஒதுங்கினார். ஆனால் அந்தக் காதலும் பாதியில் முடிந்ததை அடுத்து சில காலம் தனிமையில் இருந்த நயன் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இரண்டு பேரும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்கள்.

நடிப்பில் பிஸி: திருமணத்துக்கு பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த நயன்; இப்போதும் படுபிஸியாக நடித்துவருகிறார். ஹிந்தியில் ஜவான் படத்தில் நடித்த அவர் மேலும் சில ஹிந்தி படங்களில் கமிட்டாகியிருப்பதாக தெரிகிறது. தமிழை பொறுத்தவரை அவரது கைகளில் மண்ணாங்கட்டி, ராக்காயி உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. மேலும் கன்னடம், மலையாளம் மொழிகளிலும் கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் அவர் குறித்தும் சிம்பு குறித்தும் கெட்டவன் படத்தை இயக்குவதாக இருந்த இயக்குநர் ஜிடி நந்து சில விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.

நந்துவின் பேட்டி: கிங்வுட்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், "நான் சிம்பு மற்றும் நயனுடன் நெருங்கி பயணப்பட்டவன். ஒருமுறை நயன்தாரா ஹைதராபாத்தில் ஒரு ஷூட்டிங்கில் இருந்தார். அவரை பார்ப்பதற்காக சிம்பு சென்றார். அவருடன் நானும் சென்றேன். அப்போது அங்கு வைத்து விரும்பத்தகாத விஷயம் ஒன்று நடந்தது. அதை எப்போதுமே வெளியில் சொல்ல முடியாது. அந்த சம்பவம் என்னவென்று எங்கள் மூன்று பேருக்கு மட்டும்தான் தெரியும். அந்த சம்பவம் நடக்க நானும் ஒரு காரணமாகிவிட்டேன். அதனால் நயன் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். அந்த சமயத்தில் எல்லாம் விக்கி (விக்னேஷ் சிவன்), நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோர் எல்லாம் இந்த விஷயத்திலிருந்து வெளியில்தான் இருந்தார்கள்.

இதன் காரணத்தினால்தான் என்னவோ நயன்தாரா நெல்சன் திலீப்குமாருக்கு உதவி செய்திருக்கலாம். எப்போதுமே நெருக்கமாக இருப்பவர்களுக்கு யாரும் உதவி செய்யமாட்டார்கள். தூரமாக யார் இருக்கிறார்களோ, இருந்தார்களோ அவர்களுக்குத்தான் உதவி செய்வார்கள் என்பதை புரிந்துகொண்டேன்" என்றார். இந்தப் பேட்டியை அடுத்து ஹைதராபாத்தில் நடந்தது என்ன சம்பவமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆராய தொடங்கிவிட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X