நெல்சனுக்கு பிச்சைபோட்ட நயன்தாரா.. பழிதீர்ப்பதில் பாம்பைவிட மோசம்.. இயக்குநர் பேட்டி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்கும் அளவிற்கு இன்று இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உயர்ந்து இருக்கிறார் என்றால், அது நயன்தாரா போட்ட பிச்சைதான். சிம்புவை பழிதீர்க்க வேண்டும் என்கிற ஆதங்கத்தில் தான் அவரை வளர்த்துவிட்டார். அதே போல விக்னேஷ் சிவனுக்கும் வாழ்க்கை பிச்சை போட்டதும் நயன்தாரா தான் என நந்தக்குமார் பேட்டியில் கூறியுள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள கெட்டவன் பட இயக்குநர் நந்தவனம் நந்தகுமார், கெட்டவன் படத்தில் சிம்பு கமிட்டான கால கட்டத்தில், நான், நெல்சன், விக்னேஷ் சிவன் அனைவரும் சிம்புவுடன் பயணித்தோம். அதில், அவருடன் நெருக்கமாக இருந்தது நான் மட்டும் தான். அந்த நேரத்தில் தான் நயன்தாரா சிம்புவின் வல்லவன் படத்தில் கமிட் ஆனார். அதன்பிறகு தான் அந்த படத்தில் இருந்து லிப்லாக் போஸ்டர் வெளியாகி நயன்தாரா பெரிய அளவில் பேசப்பட்டார்.

nayanthara vignesh shivan

அதையடுத்து, நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்த பிறகு, சிம்புவிற்கு யார் யாரெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கெல்லாம் நயன்தாரா வாய்ப்பு கொடுத்து உதவி செய்தார். நெல்சன், சிம்புவை வைத்து வேட்டை என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால், அந்த படம் டிராப்பாகி விட்டது. இதனால், அவர் அடுத்த படத்திற்கான வாய்ப்பு தேடி அலைந்து கொண்டு இருந்த போது, சிம்புவை பழி தீர்க்க நினைத்த நயன்தாரா, நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்தார். கோலமாவு கோகிலா படத்தை லைகா நிறுவனம் கைவிட நினைத்த போது, நயன்தாரா அதில் தலையிட்டு, லைகாவிடம் பேசி படம் வெளிவர காரணமாக இருந்தார்.

வாழ்க்கை பிச்சை: நெல்சன் இன்று ரஜினியை வைத்து படம் எடுக்கும் அளவிற்கு பெரிய உயரத்திற்கு வந்திருப்பதற்கு முக்கிய காரணமே நயன்தாரா தான், அவர் மட்டும் அந்த நேரத்தில் லைகாவிடம் பேசவில்லை என்றால், கோலமாவு கோகிலா படமே வெளிவந்து இருக்காது. நயன்தாரா போட்ட பிச்சையில் தான் நெல்சன் வளர்ந்துள்ளார். அதே போல விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாரா வாழ்க்கை பிச்சை போட்டு உள்ளார். அதனால் தான் விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு போனார். விக்னேஷ் சிவன் மீது காதல், ஆனால் சிம்புவை பழிவாங்க நயன்தாரா நெல்சனை பயன்படுத்திக் கொண்டார்.

ழிதீர்க்கும் நயன்தாரா: என்னையும் சிம்புவிற்கு பிடிக்காது எனக்கும் நயன்தாரா ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே சிம்புவும் நயன்தாராவும் நெருங்கி பழகிய அனைத்து விஷயங்களும் எனக்கு தெரியும் என்பதால் நயன்தாரா என்னை வளர்த்து விட விரும்பவில்லை, பாம்பு பழிவாங்குமானு எனக்குத் தெரியாது, ஆனால், நயன்தாரா நினைத்தால் பழிவாங்காமல் இருக்க மாட்டார் என அந்த பேட்டியில் இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X