உலகை பிரமிக்க வைத்த விக்ரம், மண்டேலா, சார்பட்டா பரம்பரை... கமல்ஹாசனை புகழ்ந்து தள்ளிய பிரபலம்!
சென்னை: ஃபிக்கி மீடியா மற்றும் பொழுதுபோக்கு குழுவின் தலைவர் மற்றும் ஜியோஸ்டார் பொழுதுபோக்கு பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் வாஸ், மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை கருத்தரங்கில் இன்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர்,நடிகர் கமல்ஹாசனை புகழ்ந்து பேசினார்.
ஃபிக்கி மீடியா மற்றும் பொழுதுபோக்கு குழுவின் தலைவர் கெவின் வாஸ் ஓடிடி தளங்களின் வளர்ச்சி குறித்து பேசியுள்ளார். அதில், இந்த நிகழ்ச்சி பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. 2016 முதல் தென்னிந்தியாவில் ஸ்டார் டி.வி.யின் வணிக பிரிவுகளை வழிநடத்தி வருகிறேன். இந்த புதிய பயணம் தற்போது பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. தென்னிந்திய ஊடகத் துறையின் வளர்ச்சி உலகளவில் கவனத்தை பெற்றுள்ளது.

மகத்தான நடிகர் கமல்: நடிகர் கமல் இந்தியாவை உலகளவில் போற்றப்படும் நடிகராக உள்ளார். அவரது படங்களை உலக ரசிகர்கள் போற்றி வருகின்றனர். அவர் நடித்த மூன்றாம் பிறை (இந்தியில் சத்மா), அப்பு ராஜா, சாச்சி 420 போன்ற படங்கள் இந்திய அளவில் கவனத்தை பெற்றுள்ளன. ரசிகர்கள் கொண்டாடும் சிறப்பான படமாக இருந்தது.
தென்னிந்திய சினிமாவின் தாக்கம்: கொரோனாவுக்கு பின்பு வெளியான, RRR, KGF-2, மற்றும் காந்தாரா போன்ற தென்னிந்திய படங்கள் இந்தியாவைத் தாண்டி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றன. மேலும், "பொன்னியின் செல்வன்" மற்றும் "விக்ரம்" போன்ற தமிழ் படங்கள் கதைகளின் தனித்துவத்தால் தேசிய மற்றும் உலக அளவில் செல்வாக்கைப் பெற்றதாகக் கூறினார்.
கடந்தாண்டு வெளியான புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சனில் அசூர வேட்டைாடியது. இப்படம் இந்தி டப்பிங் மூலம் மட்டுமே ஹிந்தி பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் 20% அளவுக்கு பங்களித்ததையும், "மண்டேலா," "கடைசி விவசாயி," மற்றும் "சார்பட்டா பரம்பரை" போன்ற படங்கள் ஆழமான கதைகளின் மூலம் பாராட்டுப் பெற்றன என்று தெரிவித்தார்.
ஆஸ்கர் வென்ற RRR: RRR திரைப்படம் 95வது ஆஸ்கர் விருதுகளை வென்றது, "ஆல் வீ இமேஜின் அஸ் லைட்" என்ற பாயல் கபாடியாவின் படமும், "சன்ஃப்ளவர்ஸ் வெர் தி ஃபர்ஸ்ட் ஒன்ஸ் டு நோ" என்ற கன்னட குறும்படமும் 2024 கான்ஸ் திரைப்பட விழாவில் வெற்றிபெற்று உலகளவில் அங்கீகாரங்களை பெற்றன என்றார்.

செல்வாக்கு பெறும் தொலைக்காட்சி: தென்னிந்திய படங்களின் பிரபலமடைந்ததற்குக் காரணமாக ஸ்டார் கோல்ட், கலர்ஸ் சினிப்ளெக்ஸ், செட் மேக்ஸ் ஆகிய தொலைக்காட்சி சேனல்கள் மிகவும் முக்கிய பங்கு வகித்துள்ளன. தொலைக்காட்சி தற்போதும் மீடியா மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் 30% மொத்த பகுதியைப் பெற்றுள்ளது. தென்னிந்தியாவில் தொலைக்காட்சி தொடர்கள் அதிக ரசிகர்களை கொண்டுள்ளது என புகழாரம் சூட்டினார்.
டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களின் செல்வாக்கு: இன்றைய சூழலில் நல்ல திரைப்படத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறது. அந்த வகையில் டிஜிட்டல் தளமான யூடியூப், இன்ஸ்டா போன்றவைகள் மக்களுக்கு பிடித்த படங்களை ரசிக்க வைக்கின்றன. நல்ல விமர்சனங்கள் மூலம் ஒரு படம் வெற்றி பெறுகிறது. திரையில் கண்டுகளிக்கும் ஆர்வத்தையும் ஊட்டுகிறது. மக்களுக்கு படத்தின் மூலம் ஒரு நல்ல செய்தி சேர்கிறது என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











