இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் செல்லாது செல்லாது...- கேயார் அணி அறிவிப்பு

By Shankar

Keyaar team not accepted Thaanu's no confidence motion
சென்னை: கலைப்புலி தாணு அணியினர் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் செல்லாது என்று அறிவித்துள்ளனர் கேயார் அணி.

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள அரசியல், குழப்படிகளுக்கு நிகராக வேறு எங்குமே பார்க்க முடியாது எனும் அளவுக்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது.

நாளொரு கூட்டணி, பொழுதொரு பேச்சு என்று தயாரிப்பாளர்கள் தங்களைத் தாங்களே சிறுமைப்படுத்திக் கொண்டு வருகின்றனர். தயாரிப்பாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க உருவான சங்கம், இன்று பிரச்சினைகள் மொத்த உருவமாகத் திகழ்கிறது.

கேயார் தலைமையிலான அணி தேர்தலில் வென்று பொறுப்புக்கு வந்த எட்டு மாதங்களில், அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார் கலைப்புலி தாணு.

கடந்த ஞாயிறன்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் நடந்த வாக்கெடுப்பில் இந்த தீர்மானம் வெற்றியடைந்தது. கேயார் பதவி விலக வேண்டிய நிலை உருவானது.

ஆனால் இதனை ஏற்கமாட்டோம் என்று கேயார் அணி அறிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று கேயார் அணியின் சார்பில், சங்கத்தின் பொதுச் செயலர் ஞானவேல்ராஜா விடுத்துள்ள அறிக்கை:

11.5.2014 அன்று நடந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க சிறப்புப் பொதுக்குழுவில் கேயார் நிர்வாகத்தின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டப்படி செல்லாது.

ஏன் என்றால்.....

1. எந்த காரணத்திற்காக கேயார் நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.

2. நிகழ்ச்சி நிரல்படி முறையாக தீர்மானங்கள் பற்றி பேச அனுமதிக்கப்படவில்லை.

3. முக்கியமான தீர்மானங்கள் பற்றி விளக்கமாக பேச அனுமதிக்கப்படவில்லை.

4. ஓட்டுரிமையுள்ள 92 பேருக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

5. ஓட்டுரிமை மறுக்கப்பட்ட ஒரு உறுப்பினரான சுரேஷ் காமாட்சி அவர்கள் நீதிமன்றம் சென்று ஓட்டுரிமை பெற்று வாக்களித்துள்ளார்.

6. பொதுக்குழுவில் சிலர் அராஜகமாக நடந்து கொண்டதால், சிலர் தங்கள் விளக்கத்தை உறுப்பினர்களுக்கு சொல்ல முடியவில்லை. மூத்த தயாரிப்பாளர்கள் பலர் வாக்களிக்காமல் சென்றுவிட்டார்கள்.

"பொதுக் குழுவில் ஓட்டளிக்கும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு மடங்கு பலத்தைப் பெற்றால் மட்டுமே தீர்மானம் வெற்றி பெற்றதாகும்'' என்பதை தேர்தல் பொறுப்பு ஓய்வுபெற்ற நீதிபதி பி.சண்முகம் 1.5.2014 அன்று அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி பார்த்தால் பதிவான 449 ஓட்டுக்களில் வெற்றிபெற வேண்டுமானால் ஏறத்தாழ 300 ஓட்டுக்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் பெற்றது 261 ஓட்டுக்கள் மட்டுமே. ஆகையால் இத்தீர்மானம் சட்டப்படி செல்லாது.

இத்தகைய முறைகேடுகள் பற்றிய தகவல்களை புகாராகவே ஓய்வுபெற்ற நீதிபதி பி.சண்முகம் அவர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தற்போதுள்ள நிர்வாகத்தில் பதவியில் உள்ள துணைத்தலைவர் டி.ஜி.தியாகராஜன், செயலாளர் டி.சிவா, பொருளாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகிய இவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யாமலேயே, அவர்கள் அங்கம் வகிக்கும் நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த தாணுவுடன் சேர்ந்து கொண்டார்கள்.

ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டு, அதை நீதிபதி இன்னும் பத்து தினங்களில் நீதிமன்றத்தில் ஒப்படைப்படைதாகவும், முடிவை நீதிமன்றம்தான் அறிவிக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஆகவே, நம்பிக்கையில்லா தீர்மானம் முடிவை நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.

-இவ்வாறு ஞானவேல்ராஜா அதில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X