twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிடிஎச் விவகாரம்... கமலுக்கு முழு ஆதரவு - பிலிம்சேம்பர், கேயார் அணி அறிவிப்பு

    By Shankar
    |

    Kamal Hassan
    சென்னை: விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிடும் கமலின் முடிவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக பிலிம்சேம்பர் மற்றும் கேயார் அணி அறிவித்துள்ளது.

    கமல் முடிவு குறித்து விவாதிக்க, தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் இன்று கேயார் தலைமையில் தயாரிப்பாளர் சங்கத்தில் கூடினர்.

    கூட்டத்தின் முடிவில் நிருபர்களைச் சந்தித்த கேயார் கூறுகையில், "கமல் திறமைசாலி. விஞ்ஞானம் புரிந்தவர். அந்த வளர்ச்சியின் பின்னால் போய்க்கொண்டிருப்பவர்.அப்படிப்பட்டவர் இப்போது எடுக்கும் இந்த முயற்சி நிச்சயம் தப்பாக இருக்காது.

    தயாரிப்பாளர்களுக்கு புதிய வழியில் ஒரு வருமானத்தை கொடுக்கக்கூடிய சூழல் இந்தப் படத்தால் உருவாக்கியுள்ளது.

    நாங்களெல்லாம் ஓவர்சீஸ் என்று சொல்லப்படுகிற வெளிநாட்டு பட வியாபாரம் பற்றித் தெரியாமல் இருக்கும் போது அவர், தனது அபூர்வ சகோதரர்கள் படத்தை வெளிநாடுகளில் தனித்தனியாக விற்று பணம் சம்பாதித்துக் காட்டினார்.

    இன்றைக்கு அந்த வழியைத்தான் எல்லா தயாரிப்பாளர்களும் பின்பற்றி நல்ல பணம் சம்பாதிக்கிறார்கள்.

    இன்றைக்கு பெரிய தயாரிப்பு நிறுவங்கள் கூட வருமானமின்றி தடுமாறுகின்றன.

    அவர்களுக்கு இந்த டிடிஎச் ஒளிபரப்பு முறை பெரிய ஆறுதலாக இருக்கும். எனவே அவரது இந்த முயற்சிக்கு எங்களுடைய ஆதரவு உண்டு.

    சென்ற ஆண்டு தமிழில் 128 படங்கள் ரிலீஸ் ஆகியது. அதேபோல இந்த ஆண்டு இதுவரை 148 படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. ஆனால் அந்த 148 படங்களில் வெறும் 8 படங்கள் தான் ஹிட்டாகி இருக்கின்றன. அப்படி ஹிட்டான படங்களுக்கும் கூட சரியான லாபம் வந்து சேரவில்லை.

    டி.டிஹெச்சில் ரிலீஸ் செய்வதால் ரசிகர்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. கண்டிப்பாக எல்லா படங்களையும் வீட்டில் சின்ன திரையில் பார்க்க முடியாது. அதேபோலத்தான் இந்தப் படத்தையும் ஒரு சின்னத்திரையில் பார்த்து சந்தோஷப்பட்டு விட முடியாது. கண்டிப்பாக இந்தப் படத்தை தியேட்டரில் போய் பார்க்க ரசிகர்கள் வருவார்கள்.

    எங்களுடன், பிலிம்சேம்பரும் இணைந்து கமலை ஆதரிக்கிறது," என்றார்.

    English summary
    Keyar, who is heading a faction of Producers announced his support to Kamal's decision to releasing Viswaroopam in DTH.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X