நான் பான் மசாலா ஸ்டார் இல்லை.. பான் இந்தியா ஸ்டார்.. பல கோடி டீலை புறக்கணித்த யஷ்!

பெங்களூரு: பான் மசாலா விளம்பரத்தில் நடித்தால் பல கோடி ரூபாய் கிடைக்கும் என வந்த சூப்பரான டீலை நிராகரித்துள்ளார் நடிகர் யஷ்.

கேஜிஎஃப் 2 படத்தின் மூலம் 1000 கோடி ரூபாய் வசூல் நாயகனாக மாறி உள்ளார் நடிகர் யஷ்.

இந்நிலையில், பிரபல பான் மசாலா நிறுவனம் ஒன்று அவருடன் டீல் பேசியதாகவும், அதை வேண்டாம் என அவர் கூறியதாகவும் டேலன்ட் மேனேஜ்மென்டின் தலைவர் அருண் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பான் மசாலா விளம்பரத்தில்

பான் மசாலா விளம்பரத்தில்

சிகரெட் விளம்பரம், சரக்கு விளம்பரம், பான் மசாலா விளம்பரம் என மக்களை கெடுக்கும் பொருட்களுக்கு விளம்பரம் செய்து பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் சம்பாதித்து வருகின்றனர். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாக ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்கலே விமால் எலாய்ச்சி விளம்பரத்தில் நடித்து வருகின்றனர்.

சரக்கு விளம்பரத்தில் நடிகைகள்

சரக்கு விளம்பரத்தில் நடிகைகள்

அதே போல போதையை ஊக்குவிக்கும் விதமாக விஷ்கி பிராண்டுகளை புரமோட் செய்து நடிகை சமந்தா, ஹன்சிகா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் விளம்பரங்களை வெளியிட்டு வந்தனர். அதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

அக்‌ஷய் குமார் மன்னிப்பு

அக்‌ஷய் குமார் மன்னிப்பு

விமல் எலாய்ச்சி விளம்பரத்தில் ஷாருக்கான் மற்று அஜய் தேவ்கன் உடன் புதிதாக இணைந்த நடிகர் அக்‌ஷய் குமாரை பாலிவுட் ரசிகர்கள் பங்கமாக ட்ரோல் செய்து கலாய்த்து எடுத்தனர். உடனடியாக அந்த விளம்பரத்தில் நடித்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இனிமேல், இது போன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.

கோடிக்கணக்கில் டீல்

கோடிக்கணக்கில் டீல்

இந்நிலையில், இந்தியா முழுவதும் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான நடிகர் யஷ்ஷை பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க வைத்தால் பெரிய பப்ளிசிட்டி கிடைக்கும் என நினைத்து பிரபல நிறுவனம் ஒன்று பல கோடிக்கு டீல் பேசியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை யஷ்ஷின் நண்பரும் டேலன்ட் மேனேஜ்மென்டின் தலைவர் அருண் பானர்ஜி உறுதி செய்துள்ளார்.

மறுத்த யஷ்

மறுத்த யஷ்

ஆனால், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என அந்த பல கோடி ரூபாய் டீலிங்கை வேண்டாம் எனக் கூறி விட்டார் நடிகர் யஷ் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விவரத்தை அறிந்த யஷ் ரசிகர்கள் ராக்கி பாயை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

அல்லு அர்ஜுனும்

அல்லு அர்ஜுனும்

இதற்கு முன்னதாக புஷ்பா படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமான நடிகர் அல்லு அர்ஜுனையும் பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தனர். ஆனால், அவரும் அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என தெளிவாக சொல்லி விட்டார். கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் எல்லாம் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டோம் என்பதை ஒரு குறிக்கோளாகவே பல ஆண்டுகளாக கொண்டிருப்பது சிறப்பான விஷயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X