கே ஜி எஃப் 2 ஆடியோ உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!
சென்னை : நடிகர் யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் முதல் பாகத்தை விடவும் பிரம்மாண்டமாக கே ஜி எஃப் 2 உருவாகி வருகிறது.
கோலார் தங்க சுரங்கத்தை பற்றி எடுக்கப்படும் கே ஜி எஃப் 2 - ல் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு டீஸர் வெளியாகி இணையத்தை பற்றி எரிய வைத்த நிலையில் கே ஜி எஃப் 2 ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

வசூல் வேட்டை
கன்னடத்தில் பிரம்மாண்டமாக உருவான கே ஜி எஃப் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. இந்திய அளவில் பாகுபலிக்கு இணையாக இந்த படம் மிக பிரபலமாக பேசப்பட்டது. இதுவரை பலரும் அறிந்திராத கோலார் தங்கச் சுரங்கத்தை பற்றி எடுக்கப்பட்டு இருந்தது.

ஆதிரா
முதல் பாகம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது . இந்தப் பாகத்தையும் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க யஷ் ஹீரோவாக நடித்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக கே ஜி எஃப் 2 உருவாகியுள்ளது . பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இதில் வில்லனாக நடித்துள்ளார். சஞ்சய் தத்தின் கதாபாத்திரத்திற்கு ஆதிரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம்
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்பொழுது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் திரையரங்குகள் திறக்கப்படாததால் இப்படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

ரூபாய் 7.2 கோடிக்கு
டீஸரைப் போலவே விரைவில் ட்ரைலரும் வெளியாக இருக்க தற்பொழுது ஜி எஃப் 2 ஆடியோ உரிமை பல கோடி ரூபாய்க்கு விற்றுத் தீர்ந்துள்ளது. அதன்படி லாஹரி மியூசிக் மற்றும் டி-சீரிஸ் நிறுவனம் ரூபாய் 7.2 கோடிக்கு இந்த உரிமையை பெற்றுள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











