Don't Miss!
- Sports
ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- Finance
ரூ50 கோடி வீடு,ஆடி கார் என பல..கே.எல்.ராகுல் அதியா ஷெட்டிக்கு குவிந்த பரிசுகளுக்கு வரி செலுத்தணுமா?
- News
"அது வேற வாய்!" ஷாருக்கின் பதான் படத்திற்கு தடை கேட்டு கொந்தளித்த பாஜக அமைச்சர்! இப்போ என்ன சொன்னார்
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
வெறும் 7 நாளில் 715 கோடி வசூல்... வேற லெவலில் மிரட்டும் கேஜிஎஃப் 2 !!
சென்னை : கேஜிஎஃப் 2 படத்தின் வெறித்தனமான வசூல் வேட்டையை பார்த்து இந்திய திரையலகமே மிரண்டு போய் உள்ளது. இதுவரை நிகழ்த்தப்பட்ட அத்தனை வசூல் சாதனைகளையும் வெறும் ஒரு வாரத்தில் அடித்து நொறுக்கி, துவம்சம் பண்ணி உள்ளது கேஜிஎஃப் 2.
கன்னட படமான கேஜிஎஃப் 2, பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ஏப்ரல் 14 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வசூல் செய்யப்பட்டது. 2018 ம் ஆண்டு ரிலீசான கேஜிஎஃப் சாப்டர் 1 ன் இரண்டாம் பாகமாக இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இந்த படம் இருந்தது.
இனிமே அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்.. ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட அக்ஷய் குமார்!

கேஜிஎஃப் 3 ம் தயாராகிறது
கேஜிஎஃப் சாப்டர் 1 ல் வில்லனாக காட்டப்பட்ட கருடனை, ராக்கி கொலை செய்து கேஜிஎஃப்பை கைப்பற்றுவதுடன் முடிக்கப்பட்டது. ராக்கி, கருடனை கொலை செய்த பிறகு என்ன நடந்தது, தனது தாயின் கனவை ராக்கி எப்படி நிறைவேற்றினார். ஒரு தாயின் கனவின் வலிமை பற்றி காட்டி உள்ளனர். கேஜிஎஃப்பை முழுவதுமாக கைப்பற்றி, தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்த ராக்கி கொல்லப்படுவதாக கேஜிஎஃப் சாப்டர் 2 முடிக்கப்படுகிறது. இருந்தாலும் கேஜிஎஃப் 3 உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளனர்.

7 நாளில் 715 கோடி வசூல்
மிக அதிக தொகைகளை வசூலித்த இந்திய படங்களில் கேஜிஎஃப் 2 தற்போது 7 வது இடத்தில் உள்ளது. இந்தியில் வெறும் 7 நாட்களில் 200 கோடி வசூலித்த படங்களின் பட்டியலில் கேஜிஎஃப் 13வது இடத்தில் உள்ளது. ரிலீசான 7 நாட்களில் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தை விட உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்துள்ளது. முதல் 7 நாட்களில் 715 கோடிகளை கேஜிஎஃப் 2 வசூல் செய்துள்ளது. வெகு விரைவில் 1000 கோடி கிளப்பில் கேஜிஎஃப் 2 இணைய உள்ளது.

ஒரு நாள் வசூலே இவ்வளவா
நேற்று மட்டும் இந்தியில் 15 முதல் 16 கோடிகளை வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் 40 முதல் 45 கோடிகளை கேஜிஎஃப் 2 வசூல் செய்துள்ளது. இதுவரை மொத்தமாக இந்தியில் 253.7 முதல் 254.7 கோடிகளையும், உலகம் முழுவதும் 716 முதல் 721 கோடிகளையும் வசூல் செய்துள்ளது. முதல் 6 நாட்களில் இந்தியா முழுவதும் 566 கோடிகளை கேஜிஎஃப் 2 வசூல் செய்துள்ளது. ரிலீசான முதல் 7 நாட்களில் ஆர்ஆர்ஆர் 710 கோடிகளையும், பாகுபலி 2 படம் 830 கோடிகளையும் வசூல் செய்தது.
Recommended Video

100 கோடிக்கு 700 கோடி லாபம்
உலகம் முழுவதும் 10,000 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்ட கேஜிஎஃப் 2 ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே உலகம் முழுவதும் 345 கோடிகளை வசூல் செய்து விட்டது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கேஜிஎஃப் 2 படம் ரிலீசுக்கு முன்பே போட்ட பணத்தை விட பல மடங்கு அதிகமான லாபத்தை பெற்றுவிட்டது.