பீஸ்ட் டிரைலர் பார்த்துட்டு கேஜிஎஃப் இயக்குநர் என்ன சொன்னார் தெரியுமா? இந்த ஏப்ரல் தெறிக்கப் போகுது!

சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் படம் ரிலீசாக காத்திருக்கிறது.

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி 25 மில்லியன் வியூஸை மின்னல் வேகத்தில் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் இடையே தான் பாக்ஸ் ஆபிஸ் கிளாஷ் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் பீஸ்ட் படத்தின் டிரைலர் பார்த்துட்டு போட்டிருக்கும் ட்வீட் தற்போது டிரெண்டாகி வருகிறது.

ஏப்ரல் சம்பவம்

ஏப்ரல் சம்பவம்

வலிமை, எதற்கும் துணிந்தவன், ஆர்ஆர்ஆர் என வரிசையாக பெரிய நடிகர்களின் படங்கள் தியேட்டர்களில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் சம்பவம் செய்து வருகிறது. இந்நிலையில், இந்த ஏப்ரல் மாதத்தில் மேலும், இரண்டு பெரிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் சம்பவம் செய்ய அடுத்த வாரம் ரிலீசுக்கு ரெடியாகி வருகின்றன. விஜய்யின் பீஸ்ட் ஏப்ரல் 13ம் தேதியும், நடிகர் யஷ்ஷின் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14ம் தேதியும் வெளியாகிறது.

மோதல் இல்லை

மோதல் இல்லை

இதுதொடர்பான கேள்வியை நமது ஒன் இந்தியா பில்மிபீட் நிரூபர் கேஜிஎஃப் ஹீரோ யஷ்ஷை பார்த்தே கேட்ட நிலையில், அதற்கு அவர் அளித்த பதில் சமூக வலைதளத்தில் செம டிரெண்ட் ஆனது. பீஸ்ட் vs கேஜிஎஃப் இல்லைங்க.. பீஸ்ட் அண்ட் கேஜிஎஃப் என தெளிவான பதிலை நடிகர் யஷ் சொல்லி இருந்தார். மேலும், விஜய் படத்தை நான் பார்ப்பேன். என் படத்தை அவரது ரசிகர்களும் பார்ப்பார்கள் என நம்புகிறேன் எனக் கூறியிருந்தார்.

நெல்சன் வாழ்த்து

நெல்சன் வாழ்த்து

பீஸ்ட் படத்தின் அப்டேட் கூட கொடுக்காமல் கேஜிஎஃப் டிரைலர் வெளியானதும் இயக்குநர் நெல்சன் அந்த டிரைலரை மனமார பாராட்டி ட்வீட் போட்டிருந்தார். இயக்குநர் பிரசாந்த் நீல் நெல்சன் ட்வீட்டுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதன் பிறகு தற்போது பீஸ்ட் படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியாகி உள்ள நிலையில், கேஜிஎஃப் பட இயக்குநர் அந்த டிரைலரை பார்த்து விட்டு ட்வீட் போட்டுள்ளார்.

பிரசாந்த் நீல் பாராட்டு

பிரசாந்த் நீல் பாராட்டு

இயக்குநர் பிரசாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில் "வாவ்! பீஸ்ட் டிரைலர் வெறித்தனமா இருக்கு இயக்குநர் நெல்சன்.. விஜய் சார் பட்டாசா வெடிக்கிறாரு" என பாராட்டி போட்ட ட்வீட் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒரே சமயத்தில் வெளியாகும் இரு படங்களின் இயக்குநர்கள் இடையே இப்படியொரு நட்பு இருப்பது சினிமாவுக்கு ரொம்பவே ஆரோக்கியமான விஷயம் என்கின்றனர். இயக்குநர் நெல்சன் இந்த ட்வீட்டை பார்த்து நன்றி தெரிவித்துள்ளார்.

Recommended Video

திருநெல்வேலி: 'பீஸ்ட்' ட்ரைலர் பார்த்த குஷியில்... தியேட்டரில் சீட்டுக்களை உடைத்த விஜய் ரசிகர்கள்!
கேஜிஎஃப் இயக்குநர் இயக்கத்தில் விஜய்

கேஜிஎஃப் இயக்குநர் இயக்கத்தில் விஜய்

நடிகர் யஷ்ஷை தொடர்ந்து பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கி வரும் கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் ஒரு படத்தை இயக்க உள்ளார். பீஸ்ட் டிரைலரை பாராட்டிய பிரசாந்த் நீல் தான் ஒரு விஜய் ரசிகர் என ஏற்கனவே கூறியுள்ள நிலையில், விஜய்யை வைத்து ஒரு படம் உங்க ஸ்டைல்ல பண்ணுங்க பிரசாந்த் பாக்ஸ் ஆபிஸ் தெறிக்கும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X