பீஸ்ட்டை பந்தாடிய கேஜிஎஃப் 2.. ராக்கி பாயை கொண்டாடும் ரசிகர்கள்.. இதுதான் வெயிட்டு காட்டுறதா?

சென்னை: ஜாலியோ ஜிம்கானா பாடலில் வரும் வரிகளை எல்லாம் போட்டு தற்போது பீஸ்ட் படத்தை விஜய் ஹேட்டர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Recommended Video

KGF 2 Audience Review | Yash | KGF 2 Public Review | Filmibeat tamil

பீஸ்ட் vs கேஜிஎஃப் என பயங்கர பில்டப் கொடுக்கப்பட்ட நிலையில், திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் பீஸ்ட் படம் பெரிய அடி வாங்கி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அதே சமயம் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னமும் டெரர் ஆக வெளியாகி கேஜிஎஃப் சாப்டர் 2 வெயிட்டு காட்டி உள்ளது.

ரிலீஸ் பிளான்

ரிலீஸ் பிளான்

பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் திரைப்படங்கள் ஒன்றாக வெளியானால் பயங்கர பாக்ஸ் ஆபிஸ் கிளாஷ் ஆகும் என்பதை தெரிந்து கொண்டே பீஸ்ட் படத்தை ஏப்ரல் 13ம் தேதியே படக்குழு வெளியிட்டது. ஆனால், பீஸ்ட் படம் கேஜிஎஃப் படத்துக்கு சரியான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது இல்லாமல் போனது ரொம்பவே வருத்தமளிக்கிறது.

4வது இடத்தில் கோலிவுட்

4வது இடத்தில் கோலிவுட்

ஆர்ஆர்ஆர் படம் ஆயிரம் கோடியை கடந்து மிகப்பெரிய வசூல் சாதனையை செய்து இந்தியளவில் டோலிவுட்டை முதல் இடத்தில் வைத்துள்ளது. இரண்டாவது இடத்திற்கு கேஜிஎஃப் திரைப்படம் கன்னட திரையுலகை கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெளியாகி 250 கோடி வசூல் செய்து பாலிவுட்டையும் தலை நிமிர வைத்து 3வது இடத்தை பிடித்துள்ளது. வலிமை, எதற்கும் துணிந்தவன் படங்களை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படமும் விமர்சன ரீதியாக அடிவாங்கி உள்ள நிலையில், 4வது இடத்திற்கு கோலிவுட் தள்ளப்பட்டுள்ளது.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரம்மாண்ட ஸ்டன்ட் காட்சிகள், பில்டப் என ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும், அதற்கு ஏற்றார்போல வலுவான திரைக்கதை மற்றும் காட்சிப்படுத்துதல் இருப்பதால் இப்படி RRR மற்றும் KGF 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் பாராட்டுக்களையும் விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெறுகின்றன.

நெல்சன் சொதப்பல்

நெல்சன் சொதப்பல்

இயக்குநர் நெல்சன் நடிகர் விஜய்க்கு தரமான சம்பவத்தை பீஸ்ட் படத்தில் ஃபேன் பாயாக பண்ணி இருந்தாலும், வலுவான திரைக்கதை மற்றும் வில்லன் போர்ஷனை சொதப்பியது தான் பீஸ்ட் படத்தின் சறுக்கலுக்கு காரணம் என பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், கேஜிஎஃப் 2 வெளியாகி கொஞ்சம் நஞ்சம் இருந்த பீஸ்ட் மானத்தையும் வாங்கி விட்டதாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

தளபதி 66

தளபதி 66

இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 66 திரைப்படம் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களை கவரும் விதமாக தளபதி 66 படத்தை வம்சி இயக்க வேண்டும் என்றும் விஜய்க்கு சரியான ஒரு பிளாக்பஸ்டர் படத்தை கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X