“கே.ஜி.எஃப் 2“ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?... வாய்பிளந்த திரையுலகம் !
சென்னை : யாஷின் அபரிமிதமான நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் 2 திரைப்படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலா உள்ளதாக கூறப்படுகிறது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் கே.ஜி.எஃப். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது.
யாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கே.ஜி.எஃப் சாப்டர் 2
கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப்- யை யாஷ் கைப்பற்றினார். அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகம் தொடர்கிறது. கே.ஜி.எஃப் பில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்லது செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார் யாஷ் கே.ஜி.எஃப் பை பிடிக்க யாஷுக்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், யாஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். இறுதியில் கே.ஜி.எஃப்பை யார் கைப்பற்றுகிறார்கள் என்பது தான் கதை

சலாம் ராக்கி பாய்
கன்னட சினிமாவின் பிராண்ட அம்பாஸிட்டராக உருவெடுத்திருக்கிறார் யாஷ் . 'சலாம் ராக்கி பாய்' என மற்ற மொழி ரசிகர்களும் அவரை உச்சி முகர்ந்து கொண்டாடி வருகிறார்கள். அவர் வரும் ஒவ்வொரு காட்சியில் திரையில் ஒரு பிரளையத்தை ஏற்படுத்தி மிரட்டுகிறது. நீளமான தாடியும், வாட்டசாட்டமான தேகம் என இளம் ரசிகைகளின் மாஸ் ஹீரோவாக மனதில் பதிந்துள்ளார்.
Recommended Video

அதிகமான திரையரங்குகளில்
தமிழகத்தில் கே ஜி எப் 2 படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து அதிகமான திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டுள்ளது. கேஜிஎப் படத்தை தமிழகத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்ட அதிகமான திரையரங்குகள் படம் திரையிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

பல கோடி வசூல்
இந்நிலையில் முதல் நாளிலேயே கே.ஜி.எஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ரூ. 12 கோடியும், கேரளாவில் ரூ. 8கோடியும், வட இந்தியாவில், ரூ. 65கோடியும், ஆந்திராவில் ரூ. 45கோடியும், வெளிநாட்டில் நேற்றைய வசூல் ரூ. 30கோடியும், மொத்தத்தில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது. கே.ஜி.எஃப் 2 நிச்சயம் 500 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











