வெளியான 11 நாளில் கேஜிஎப் 2 மகத்தான வெற்றி… பாக்ஸ் ஆபிஸ் சாதனை!
சென்னை : கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியான 11 நாளில் மகத்தான சாதனை படைத்துள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷின் வெறித்தனமாக நடிப்பில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளத் திரைப்படம் கேஜிஎஃப் 2.
பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

கேஜிஎஃப் 2
கேஜிஎஃப் முதல் பாகம் வெளியான போதே ஒட்டுமொத்த உலகத்தையும் தனது அசாத்திய நடிப்பால் திரும்பிபார்க்கவைத்தவர் யாஷ். கன்னட நடிகராக இருந்த போதும், மொழி வேறுபாடு இல்லாமல் அனைத்து மொழிபேசும் ரசிகர்களின் மனதில் ராஜாவாக அமர்ந்துவிட்டார் யாஷ். கேஜிஎஃப் 2 எப்போது வெளியாகும் காத்துக்கொண்டிருந்தனர் யாஷின் தீவிரரசிகர்கள்.

அனைத்தும் பக்கா
கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா காரணமாக தமிழ் புத்தாண்டு நாளன்று வெளியானது. இப்படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் திருவிழாப்போல கொண்டாடி வருகின்றனர். கேஜிஎப் 2 படத்தை ஒரு குறையும் சொல்ல முடியாதபடி இசை, ஸ்கின்ப்ளே, எடிட்டிங் என அனைத்தும் பக்காவாக இருப்பதாக ரசிகர் படத்தை பற்றி நல்ல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

யாஷ் நான் பிளஸ்
இந்த திரைப்படத்தில் யாஷை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு வெற்றி பெற்று இருக்காது, இந்த படத்திற்கு பிளஸ் யாஷ் தான். ஒட்டுமொத்த கதையையும் தூக்கி நிறுத்தி, படத்திற்கு வலுசேர்ந்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிரூட்டி படத்தை மேலும் அழகாக்கி உள்ளார் இயக்குநர் பிரசாத் நீல்.
Recommended Video

11 நாள் சாதனை
கேஜிஎஃப் 2 ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. தற்போது 11 நாளில் ஹிந்தியில் மட்டும் 300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து இருக்கிறது. வசூலில் முக்கிய மைல்கல்லை தொட்டுள்ளது. முதல் நாள் வசூல்100 கோடியும், இரண்டாம் நாள் வசூல் 150 கோடி ரூபாய் என தற்போது 11வது நாள் வசூலாக 300 கோடி ரூபாய உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 645 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடி வரும் நேரத்தில் இத்திரைப்படம் குறித்து ஓர் சர்ச்சை எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











