பீஸ்ட் வசூலை முறியடித்த கே.ஜி.எஃப் 2… வசூலில் புதிய சாதனை படைத்த ராக்கி பாய் !

சென்னை : கே.ஜி.எஃப் சாப்டர் 2 பீஸ்ட் திரைப்படத்தின் வசூலை ஓரம்கட்டி வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் கே.ஜி.எஃப். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது.

யாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பீஸ்ட்

பீஸ்ட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

வசூலில் சாதனை

வசூலில் சாதனை

பீஸ்ட் திரைப்படத்திற்கு பல நெகட்டிவ் கருத்துக்கள் வந்தாலும், வசூலில் சாதனை படைத்துள்ளது. சென்னையில் மட்டுமே சுமார் ரூ. 1.96 கோடி வரை முதல் நாள் வசூல் செய்துள்ளது. இதன்முலம், இதற்குமுன் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்தின் முதல் நாள் வசூலை பீஸ்ட் முறியடித்துள்ளது.

கே.ஜி.எஃப் 2

கே.ஜி.எஃப் 2

இந்நிலையில், கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இன்று பிரம்மாண்டமாக வெளியானது. உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியானது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

KGF 2 Audience Review | Yash | KGF 2 Public Review | Filmibeat tamil
ரூ. 150 கோடி வசூல்

ரூ. 150 கோடி வசூல்

இந்நிலையில், கே.ஜி.எப் 2 திரைப்படம் உலகளவில் சுமார் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் ஆகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 7 கோடியும், கேரளாவில் ரூ. 6 கோடியும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். பீஸ்ட் திரைப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தாலும் கூட, கே.ஜி.எப் 2 திரைப்படம் அதனை அசால்ட்டாக முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X