இந்தியில் மட்டுமே ஆர்ஆர்ஆர் கலெக்ஷனை முந்திய கேஜிஎப் 2 படத்தின் வசூல்
மும்பை : நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேஜிஎப் சாப்டர் 2. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் நாளைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் படம் இந்தியில் மட்டும் அதிக வசூலை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கேஜிஎப் சாப்டர் 2 படம்
நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டன்டன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் மிரட்டலான வகையில் உருவாகியுள்ளது கேஜிஎப் சாப்டர் 2 படம். இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் முதல் பாகம். மிரட்டலான அனுபவத்தை இந்தப் படம் ரசிகர்களுக்கு கொடுத்தது.

பிரஷாந்த் நீல் இயக்கம்
இந்நிலையில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் தற்போது படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் கேங்ஸ்டர் படமாக வெளியான இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதிரடியாக ரசிகர்களுக்கு அதிர்வலைகளை கொடுத்திருந்தது.

அதிக எதிர்பார்ப்பு
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்த எதிர்பார்ப்புகளை கேஜிஎப் சாப்டர் 2 கண்டிப்பாக பூர்த்தி செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் முன்னதாக வெளியான படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள்.

மிரட்டலான ட்ரெயிலர்
ட்ரெயிலர் மற்றும் டூபான் பாடல் ரசிகர்களை மிகவும் மிரட்டியுள்ளது. இந்நிலையில் இன்றைய தினமும் ஒரு பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் சர்வதேச அளவில் அதிகமான வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டுமே அதிக வசூலை படம் எட்டியுள்ளது.

இந்தியில் முதல்நாள் கலெக்ஷன்
இந்நிலையில் இந்தியில் மட்டுமே 45 முதல் 50 கோடி ரூபாயை படம் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் பாகுபலி 2 படத்தின் மொத்த வசூலை தனது முதல் நாள் கலெக்ஷனிலேயே இந்தப் படம் முறியடித்து சாதனை செய்யவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் வெளியாகி வசூல்சாதனை செய்துள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் நாள் வசூலையும் கேஜிஎப் 2 படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை
அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டுமே அதிலும் இந்தியில் மட்டுமே 25 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது கேஜிஎப் 2 படம். இதேபோல இந்தப் படத்தின் முதல் பாகத்தின் வசூலையும் முதல் நாளிலேயே முறியடித்துள்ளது. இதுகுறித்து பாலிவுட்டின் பொருளாதார நிபுணர் சுமீத் காடல் கணித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











