சோதனைக்கு மேல் சோதனையை சந்திக்கும் கேஜிஎஃப் படக்குழு... மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது!

பெங்களூரு :கேஜிஎஃப் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அதைவிட பிரம்மாண்டமாக கேஜிஎஃப் பாகம்-2 உருவாகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கச் சுரங்கத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.

கேஜிஎஃப் 2 மிரட்டலாக உருவாக்கப்பட்டு புதிதாக பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் தயாராகி வந்த நிலையில் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி போய் உள்ளது.

அதிக வசூல்

அதிக வசூல்

இதுவரை கன்னட சினிமாக்களில் ஏற்படுத்தாத தாக்கத்தை கேஜிஎஃப் திரைப்படம் ஏற்படுத்தி இருக்க இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் இப்படம் ஈர்த்துள்ளது. பிரம்மாண்ட ஆக்சன், அட்டகாசமான கதை, பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்பு என அனைத்திலும் வேற லெவல் செய்திருந்த கேஜிஎஃப் முதல் பாகம் இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. இதில் நடிகர் யஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.

ராட்சத செட்டுகள்

ராட்சத செட்டுகள்

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான முதல் பாகம் மெகா ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து இப்பொழுது இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமான முறையில் இப்படம் உருவாகி வருகிறது அதற்காக ராட்சத செட்டுகள் அமைக்கப்பட்டு கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கேஜிஎஃப் 2 முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால் இந்த படத்தையும் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.

சஞ்சய் தத்

சஞ்சய் தத்

மேலும் இதில் ரவீனா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க படத்தின் வில்லனாக சூரிய வர்மாவின் தம்பியான ஆதிரா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பாலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் அதிக அளவில் உள்ளது. கேஜிஎஃப் 2 டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இணையதளத்தில் இன்றுவரை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

ரிலீஸ் தேதி

ரிலீஸ் தேதி

இந்நிலையில் கேஜிஎஃப் 2 ஜூலை 16ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டதால் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. எனவே செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்யலாம் என படக்குழு ஆலோசித்து வந்தது. இப்பொழுது ஒரேடியாக டிசம்பர் மாதத்திற்கு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. எந்த தேதியில் வெளியாகும் என்கின்ற அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. மேலும் இப்படம் தெலுங்கு, கன்னடம், தமிழ்,மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X