ரசிகர்கள் எதிர்பார்ப்பு.. தயாரிப்பாளர் விளக்கம்.. 'கே.ஜி.எப் சாப்டர் 2' டீசர் இப்ப இல்லையாம்ல!
சென்னை: 'கேஜிஎப் சாப்டர் 2' படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
யஷ் நடித்த 'கே.ஜி.எப்' படம் கன்னடம் தவிர தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது. படம் மொத்தம் ரூ.250 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது.

2 ஆம் பாகம்
இதை நடிகர் விஷால், தமிழில் வெளியிட்டார். இப்போது இதன் இரண்டாம் பாகம் இன்னும் அதிக பட்ஜெட்டில், கேஜிஎப் சாப்டர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இதையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

வில்லன் சஞ்சய் தத்
இந்தி நடிகர் சஞ்சய் தத், ஆக்ரோஷ வில்லனாக அதீரா என்ற கேரக்டரில் நடிக்கிறார். முதல் பாகத்தை தமிழில் வெளியிட்ட விஷால், இரண்டாம் பாகத்தையும் வெளியிடுகிறார். முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதை அதிகரிக்கும் வகையில், இந்த படத்தின் போஸ்டர்கள் அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரம்யா கிருஷ்ணன்
இந்தப் படத்தில் ரவீணா டாண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த கேரக்டரில் நடிக்க முதலில், ரம்யா கிருஷ்ணனிடம் கேட்கப்பட்டதாகவும் அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும் அதனால் படக்குழுவினர் ரவீணாவை ஒப்பந்தம் செய்ததாகவும் செய்திகள் வெளியானது. இதில் அவர் அரசியல்வாதியாக நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அதை ரவீணா மறுத்திருந்தார்.

கொரோனா
கடைசிக்கட்டப் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்துள்ளது. சுமார் 100 நாட்கள் நடந்த படப்பிடிப்பு, முடிந்துவிட்டது என்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக மொத்த திட்டங்களும் மாற்றப்பட உள்ளன.
இப்போது டீசர் இல்லை
இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி வந்தன. அதிக எதிர்பார்ப்பில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா, ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, இந்தப் படத்தின் டீசர் இப்போது வெளியாகாது. ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் டிரைலர் பிரமாண்டமாக வெளியாகும். அதனால் வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











