KGF 3: “கேஜிஎஃப் 3 கன்ஃபார்ம்... ஆனால் ஒரு ட்வீஸ்ட்..!” பிரசாந்த் நீல் கொடுத்த சஸ்பென்ஸ்
சென்னை: பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலார் திரைப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், கேஜிஎஃப் 3ம் பாகம் குறித்து இயக்குநர் பிரசாந்த் நீல் அப்டேட் கொடுத்துள்ளார்.

கேஜிஎஃப் 3 அப்டேட்
கன்னடத்தில் 2018ம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் திரைப்படம் அசுரத்தனமான வெற்றிப் பெற்றது. பிரசாந்த் நீல் இயக்கிய இந்தப் படத்தில் யாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். மாஃபியா ஜானரில் உருவான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதேபோல் 2022ம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் இரண்டாம் பாகம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கலெக்ஷன் செய்தது.
இதனால் யாஷ் - பிரசாந்த் நீல் காம்போ மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியது. கன்னடம் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் தரமான சம்பவம் செய்தது கேஜிஎஃப் திரைப்படம். முதல் இரண்டு பாகங்களுக்கும் அதிக வரவேற்பு இருந்ததால், மூன்றாம் பாகம் உருவாகுமா என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், பிரசாந்த் நீல் அடுத்ததாக சலார் படத்தை இயக்க சென்றுவிட்டார்.
பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் 22ம் ரிலீஸாகிறது. இது கேஜிஎஃப் ஜானர் படம் இல்லை, இரண்டு நண்பர்கள் குறித்த கதை என பிரசாந்த் நீல் கூறியிருந்தார். இந்நிலையில், சலார் படத்துக்குப் பின்னர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணையவுள்ளார் பிரசாந்த் நீல். அதேநேரம் யாஷ் நடிக்கவுள்ள 19வது படம் குறித்து நாளை அப்டேட் வெளியாகிறது.
அதன்படி யாஷ் 19 படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பிரசாந்த் நீல், கேஜிஎஃப் 3ம் பாகம் கண்டிப்பாக உருவாகும் என உறுதியளித்துள்ளார். கேஜிஎஃப் 3ம் பாகத்துக்கான கதை ரெடியாக இருப்பதாகவும், ஆனால் அதனை நான் இயக்குவது குறித்து இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் கேஜிஎஃப் 3ம் பாகத்தை நான் இயக்கவில்லை என்றாலும், அதில் யாஷ் நடிப்பது உறுதி என்றுள்ளார்.
இதனால் நாளை வெளியாகும் யாஷ் 19 அப்டேட், கேஜிஎஃப் 3ம் பாகம் தான் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் கேஜிஎஃப் 3 இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களை அதிகம் யோசிக்க வைத்துள்ளது. அதேபோல் பிரசாந்த் நீல் இயக்காத கேஜிஎஃப் 3ம் பாகம் எப்படி இருக்கும் எனவும், இது முதல் 2 பாகங்களை போல் தரமாக இருக்குமா என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











