Yash: ஒரு வருடம் ஆனபிறகும் படங்களில் கமிட்டாகாத யாஷ்.. இதுதான் காரணமா?

பெங்களூர்: கேஜிஎப் படங்களில் நடித்ததன்மூலம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் நடிகர் யாஷ்.

முன்னதாக இவர் கன்னடத்தில் அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடித்தருந்த கேஜிஎப் படங்கள் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.

நாடகக்குழு மூலமாகவே யாஷ், சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

KGF Actor Yash going to join again with Director Prashanth neel?

அடுத்தப்படத்தை அறிவிப்பாரா யாஷ்?: நடிகர் யாஷ் மேடை நாடகங்களில் நடித்து சினிமாவிலும் சிறப்பான படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய படங்களின்மூலம் இவர் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் படங்களின் மூலமே இவருக்கு சர்வதேச அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். கன்னட சூப்பர் ஸ்டாராகவும் இவர் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். யாஷின் அடுத்தப்படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர்.

கேஜிஎப் 2 படம் வெளியாகி முந்தைய பாகத்தைவிட அதிக வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்தப் படத்தில் கமிட்டாகாமல் உள்ளார் யாஷ். இவரின் அடுத்தப்படம் குறித்து பல்வேறு யூகங்கள் காணப்படுகின்றன. யாஷ் 19 படத்திற்காக அவர் பல இயக்குநர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் ஆனால் இன்னும் எதுவும் இறுதிச் செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அவர் தனது அடுத்தப்படத்தில் கமிட்டாகியுள்ளதாகவும் இந்தப் படத்தின் பட்ஜெட் கூட இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் 400 கோடி என்றும் கூறப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகிய நிலையில், கார்த்தியின் சர்தார் படத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் யாஷ் இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில் ராமாயணம் படத்தில் ராவணனாக யாஷ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் யாஷ் இதை மறுத்திருந்தார். இந்நிலையில் அவர் அடுத்தாக மீண்டும் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் இணையவே காத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காகத்தான் அவர் காத்திருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது சலார் படத்தின் வேலைகளில் பிசியாக உள்ள பிரஷாந்த் நீல், அந்தப் படத்தை முடித்துவிட்டு கேஜிஎப் 3 படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பலாம்.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் இணையும் படத்தில் யாஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது லால் சலாம் படத்தில் நடித்துவரும் ரஜினிகாந்த் அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் நடித்துவிட்டு அதை தொடர்ந்தே லோகேஷ் இயக்கத்தில் இணையவுள்ளார். இது அவருடைய இறுதிப்படமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ள நிலையில், ரஜினியின் தீவிர ரசிகரான யாஷ், இந்தப் படத்தின் வாய்ப்பு கிடைத்தால் அதை மறுக்க மாட்டார் என்றே கூறப்படுகிறது.

ஆனால் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்க தாமதமாகும் என்பதால், யாஷின் அடுத்தப் படமாக இருக்க வாய்ப்பில்லை. விரைவில் தனது அடுத்தப்படம் குறித்து யாஷ் அறிவிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்து அடுத்தடுத்து கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 படங்கள் மூலம் கவனம் பெற்றுள்ள யாஷ், தன்னுடைய அடுத்தப்படமும் சிறந்த வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X