கேஜிஎஃப் நடிகையை களமிறக்கிய ருத்ரதாண்டவம் படக்குழு.. வேற லெவல் லிஸ்ட்டா இருக்கே!

சென்னை: திரெளபதி இயக்குநர் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ருத்ர தாண்டவம் படத்தில் கேஜிஎஃப் நடிகை இணைந்துள்ளார்.

Recommended Video

நாடக காதலி நான் தான்| DRAUPATHI ACTRESS NIVYA INTERVIEW | V-CONNECCT | FILMIBEAT TAMIL

நாடக காதலை தோலுரிக்கும் விதமாக உருவான திரெளபதி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தல அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி தான் திரெளபதி படத்தை தொடர்ந்து ருத்ரதாண்டவம் படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார்.

சர்ச்சைகளுக்கு மத்தியில்

சர்ச்சைகளுக்கு மத்தியில்

இயக்குநர் மோகன். ஜி இயக்கத்தில் வெளியான திரெளபதி திரைப்படம் நாடக காதலை அம்பலப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டு இருந்தது. ஒரு சாதியினருக்கான படம் என இந்த படம் மீது ஏகப்பட்ட விமர்சனங்களும் சர்ச்சைகளும் கிளம்பின. ஆனால், திரையரங்குகளில் வெளியான இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அஜித் ரசிகர்கள் ஆதரவு

அஜித் ரசிகர்கள் ஆதரவு

தல அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் அமோக ஆதரவு தெரிவித்தனர். மேலும், நடிகை ஷாலினி தனது குழந்தைகள் மற்றும் சொந்தங்களுடன் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து தனது ஆதரவையும் தெரிவித்து இருந்தார்.

ருத்ர தாண்டவம்

ருத்ர தாண்டவம்

திரெளபதி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மோகன். ஜி மீண்டும் நடிகர் ரிச்சர்ட் ரிஷியை ஹீரோவாக்கி ருத்ர தாண்டவம் எனும் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். மேலும், அந்த படத்தில் முன்னணி நடிகர்கள் பலரை தொடர்ந்து களமிறக்கி வருகிறார்.

ஹீரோயின் யார் தெரியுமா

ஹீரோயின் யார் தெரியுமா

திரெளபதி படத்தில் ஷீலா ராஜ்குமார் நாயகியாக நடித்த நிலையில், ருத்ரதாண்டவம் படத்திற்கு குக் வித் கோமாளி பிரபலம் மற்றும் இன்ஸ்டாகிராம் கவர்ச்சி கன்னியான தர்ஷா குப்தாவை ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குநர். சோஷியல் மீடியாவில் டிரெண்டாக இருக்கும் தர்ஷா குப்தாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ள நிலையில், நிச்சயம் சினிமாவிலும் ஒரு கலக்கு கலக்குவார் என்றே தெரிகிறது.

கெளதம் மேனனும் இருக்காரு

கெளதம் மேனனும் இருக்காரு

ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா இணைந்து நடித்து வரும் ருத்ர தாண்டவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் கெளதம் மேனனை ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குநர் மோகன். டிரான்ஸ், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், குட்டி ஸ்டோரி, பாவக் கதைகள் என சமீபத்தில் ஏகப்பட்ட படங்களில் நடிப்பால் மிரட்டிய கெளதம் மேனன் இந்த படத்தில் இணைந்திருப்பது கூடுதல் பலம். போலீஸ் அதிகாரியா? அல்லது வில்லனா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

கேஜிஎஃப் நடிகை

கேஜிஎஃப் நடிகை

கெளதம் மேனனை தொடர்ந்து டத்தோ ராதாரவியும் படத்தில் சமீபத்தில் இணைந்தார். இந்நிலையில், கேஜிஎஃப் நடிகையையும் ஆன் போர்ட் செய்துள்ளது படக்குழு. ஜேஜே, கைதி, கேஜிஎஃப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை மாளவிகா அவினாஷ் தான் தற்போது முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

தேசியக் கொடி, துப்பாக்கி என சர்ஜிக்கல் ஸ்டிரைக்காக உருவாகி வரும் இந்த ருத்ர தாண்டவம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்னமும் படத்தின் படப்பிடிப்பு முடியாத நிலையில் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்யவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X