கைதியில் முக்கியமான ரோல்.. அந்த கே.ஜி.எஃப் நடிகை யார் தெரியுமா?

தீபாவளி விருந்தாக வெளியாகி இருக்கும் கார்த்தியின் கைதி திரைப்படத்தில், கே.ஜி.எஃப் புகழ் மாளவிகா அவினாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Recommended Video

வெறும் 30 நாள் கொடுங்க.. கார்த்தியிடம் கேட்ட லோகேஷ் கனகராஜ்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியாகி இருக்கும் திரைப்படம் கைதி.

கைதி படத்தை பார்த்த அனைவரும் படம் குறித்து பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து, நேற்று மாலை 6 மணிக்கு ஃபேஸ்புக் லைவ்வில் வந்த நடிகர் கார்த்தி கைதி 2 படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

ஹீரோயின் இல்லை

ஹீரோயின் இல்லை

கார்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் கைதி படத்தில், கார்த்திக்கு ஜோடியாக எந்தவொரு ஹீரோயினும் நடிக்கவில்லை. பாடல்கள் மற்றும் நாயகி என எதுவும் இல்லை என்றாலும், வெயிட்டான திரைக்கதையால் ரசிகர்களை சீட் நுனிக்கே வந்து படம் பார்க்கும் த்ரில் அனுபவத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

கன்ஃபார்ம்

கன்ஃபார்ம்

கைதி படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பை தொடர்ந்து கைதி 2 படம் உருவாகுமா? என்ற கேள்வியை நேரலையில் கார்த்தியிடமே பல ரசிகர்கள் முன் வைத்தனர். பொன்னியின் செல்வன், சுல்தான், ஜோதிகாவுடன் ஒரு படம் போன்ற கமீட்மென்ட்கள் முடிந்தவுடன் கைதி 2 நிறைவேறும் என்று கூறியுள்ளார்.

கே.ஜி.எஃப் நடிகை

கே.ஜி.எஃப் நடிகை

கைதி படத்தில் நாயகிகள் இல்லை என்றாலும், குழந்தை நட்சத்திரம் மோனிகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், கே.ஜி.எஃப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மாளவிகா அவினாஷ், கைதி படத்தில் குழந்தை மோனிகாவை ஆசிரமத்தில் பார்த்துக் கொள்பவராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மாளவிகா

மாளவிகா

மாளவிகா அவினாஷ், தமிழ், கன்னடம் என பல மொழிகளில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர். பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பிரபலமான சீரியல் ‘அண்ணி'யில் நடித்திருந்த மாளவிகா, மாதவன் நடித்திருந்த ஜே.ஜே. படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: kaithi கைதி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X