ஏகே 61 படத்தில் இணைந்த கேஜிஎஃப் 2 நடிகர்.. அஜித்தின் ரசிகருக்கு கிடைத்தது அசத்தலான ஜாக்பாட்!

சென்னை: நடிகர் அஜித் குமாரின் ஏகே61 படத்தில் கேஜிஎஃப் 2 படத்தில் வில்லன் கேங்கில் நடித்த பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏகே61 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

உடல் எடையை குறைத்து செம ஃபிட்டான தோற்றத்தில் நடிகர் அஜித் இந்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுதான் வினோத் படம்

இதுதான் வினோத் படம்

நேர்கொண்ட பார்வை பாலிவுட் படமான பிங்க் படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல வலிமை திரைப்படம் அஜித் விருப்பத்தின் பெயரில் இயக்குநர் வினோத் இயக்கி கொடுத்ததாக பேச்சுக்கள் கிளம்பின. ஏகே 61 படம் தான் முதன்முறையாக அஜித்திற்கு வினோத் சொல்லி அவரை இயக்கும் வாய்ப்பையே பெற்றார் என்றும் இந்த படத்தில் வினோத் கம்பேக் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பேங்க் ஹெயிஸ்ட்

பேங்க் ஹெயிஸ்ட்

வங்கி கொள்ளையை மையமாக வைத்து ஏகே 61 திரைப்படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹைதராபாத்தில் சென்னை மவுண்ட் ரோடு போலவே அப்படியே தத்ரூபமாக ஒரு செட்டை போட்டு படமாக்கி வருகின்றார்களாம். அங்கே உள்ள ஒரு வங்கியில் நடக்கும் கொள்ளைக்கு அஜித் தான் மாஸ்டர் மைண்ட் எனக் கூறப்படுகிறது.

ஏகே61ல் இணைந்த வேம்புலி

ஏகே61ல் இணைந்த வேம்புலி

சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்து அசத்திய ஜான் கொக்கன் கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் ஆதீராவின் அடியாளாக நடித்திருப்பார். கேஜிஎஃப் 2 படத்தில் ஹீரோயினை இழுத்து வந்ததற்காக அவரது கையை ராக்கி பாய் வெட்டி வீசுவார். இந்நிலையில், ஏகே 61 படத்தில் நடிகர் ஜான் கொக்கன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் ரசிகர்

அஜித் ரசிகர்

வீரம் படத்தில் சாதாரண அடியாளாக நடித்த ஜான் கொக்கனுக்கு அப்பவே நல்லா உழைக்கிறீங்க.. நல்லா வருவீங்க என அஜித் கொடுத்த உற்சாகம் தான் தன்னை இந்த இடத்துக்கு வரவழைத்தது என சார்பட்டா படத்தின் வெற்றிக்கு பிறகு பேட்டி கொடுத்திருந்தார். மேலும், வலிமை படத்தின் FDFSக்கு மனைவி பூஜா ராமசந்திரன் உடன் காரில் சென்ற வீடியோவையும் ஷேர் செய்து வலிமை ரிலீஸை கொண்டாடி இருந்தார். இந்நிலையில், அஜித் படத்தில் மீண்டும் அவருடன் ஒரு வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹன்சிகா படத்தில்

ஹன்சிகா படத்தில்

இன்ஸ்டாகிராமில் தனது மனைவி பூஜா ராமசந்திரன் உடன் நீச்சல் குள புகைப்படங்கள், யோகா புகைப்படங்கள் என விதவிதமாக பதிவிட்டு மாஸ் காட்டி வரும் நடிகர் ஜான் கொக்கன் அடுத்ததாக ஹன்சிகாவின் ரவுடி பேபி படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். விரைவில் அந்த படம் ரிலீசாக காத்திருக்கிறது. மேலும், சில படங்களிலும் ஜான் கொக்கன் ஒப்பந்தமாகி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X