சும்மா வெறித்தனமால்ல இருக்கு.. கே.ஜி.எஃப் சாப்டர் 2.. அதீராவின் அதிரவைக்கும் போஸ்டர் ரிலீஸ்!

சென்னை: கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தில் வில்லன் அதீராவாக நடித்துள்ள சஞ்சய் தத்தின் அதிரவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த வெறித்தனமான போஸ்டரை இயக்குநர் பிரசாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கேங்ஸ்டர் படம்

கேங்ஸ்டர் படம்

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ், ஸ்ரீனிதி ஷெட்டி நடிப்பில் வெளியான பக்கா கேங்ஸ்டர் படம் தான் கே.ஜி.எஃப். கன்னட திரையுலகின் பாகுபலி என்ற ரேஞ்சுக்கு பேரும் புகழும் இந்த படத்திற்கு கிடைத்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பான் இந்திய மொழிப் படமாக முதல் பாகம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

கே.ஜி.எஃப் சாப்டர் 2

கே.ஜி.எஃப் சாப்டர் 2

முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இந்தியா முழுவதும் ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீசும் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், வெளியான யஷ்ஷின் இரண்டாம் பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வேற லெவலில் வைரலானது.

ஆதீரா

ஆதீரா

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் மெயின் வில்லனான அதீராவின் மிரட்டல் லுக் தற்போது வெளியாகி இருக்கிறது. வைக்கிங் வீரர்களை இன்ஸ்பயராக கொண்டு சஞ்சய் தத்தின் இந்த லுக் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது என இயக்குநர் பிரசாந்த் நீல் பதிவிட்டுள்ளார்.

இதைவிட சிறந்த பரிசு கிடைக்காது

இதைவிட சிறந்த பரிசு கிடைக்காது

கே.ஜி.எஃப் படத்தில் பணியாற்றியது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும், இதை விட சிறந்த பிறந்தநாள் பரிசு ஒருபோதும் கிடைக்காது என நடிகர் சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில், படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பாலிவுட் முதல் கோலிவுட் ரசிகர்கள் வரை சஞ்சய் தத்தின் இந்த ஆதிரா ஃபர்ஸ்ட் லுக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

திணறும் ட்விட்டர்

திணறும் ட்விட்டர்

கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின் மெயின் வில்லன் அதீராவின் கொலைவெறி பிடித்த ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், #KGFChapter2 என்ற ஹாஷ்டேக்கை நடிகர் யஷ்ஷின் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அறிவிப்பு வெளியானதற்கே பல ஆயிரக் கணக்கான ட்வீட்களை தெறிக்கவிட்ட நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் இந்த லுக்கை வேற லெவலில் வைரலாக்க திட்டமிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X