KGF Chapter 2 Box Office Collection Day 2: 300 கோடியை நெருங்கும் கேஜிஎஃப் சாப்டர் 2.. பிரம்மாண்டம்!
சென்னை: திரையிட்ட இடங்களில் எல்லாம் தீபாவளி பண்டிகை போல கேஜிஎஃப் 2 படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல் காட்சியில் தொடங்கும் பிஜிஎம் கடைசி எண்ட் கிரெடிட்ஸ் வரைக்கும் நிற்காமல் அப்படியே செல்வது போல முழு படத்தையும் அந்த அளவுக்கு மாஸாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நீல்.
முதல் நாளில் இந்தியாவில் 134.5 கோடி வசூல் என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், 2வது நாளில் உலகளவில் கேஜிஎஃப் 2 எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

பக்கா கேங்க்ஸ்டர் படம்
உலகளவிலேயே இப்படியொரு கேங்ஸ்டர் படம் வெளியாகி இருக்குமா? என்றால் அது சந்தேகம் தான். அந்த அளவுக்கு ஒரு பக்கா மாஸான கேங்ஸ்டர் படமாகவே கேஜிஎஃப் 2 வெளியாகி உள்ளது. கேஜிஎஃப்பில் ராக்கி பாய் நடத்தும் ராஜங்கம், அதீராவுடன் அப்படியொரு சண்டை மற்றும் கிளைமேக்ஸில் பார்லிமென்ட்டில் புகுந்து இந்திய பிரதமர் பக்கத்திலேயே துப்பாக்கி சூடு நடத்துவது என யாருமே நினைத்துக் கூட பார்க்க முடியாத திரைக்கதையை இயக்குநர் பிரசாந்த் நீல் உருவாக்கி இருக்கிறார்.

170 கோடி
இந்தியா முழுவதும் கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியான முதல் நாளில் 134.5 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. உலகளவில் கேஜிஎஃப் 2 திரைப்படம் முதல் நாளில் மட்டும் 165 கோடி முதல் 170 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

2ம் நாள் எப்படி
ஏப்ரல் 15ம் தேதியான நேற்றும் புனித வெள்ளி விடுமுறை நாள் என்பதால் திரையரங்குகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக காணப்பட்டன பல இடங்களில் இரவு 1 மணி காட்சிகள் வரை நடத்தப்பட்டு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை கேஜிஎஃப் 2 திரைப்படம் பெற்றுள்ளது. தியேட்டர்களும் பல இடங்களில் அதிகரித்து வரும் நிலையில், இரண்டாவது நாளில் ஒட்டுமொத்தமாக 97 கோடி முதல் 100 கோடி வரை கேஜிஃப் 2 கலெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

300 கோடியை நோக்கி
இரண்டே நாட்களில் யஷ் நடித்த கேஜிஎஃப் 2 திரைப்படம் 275 கோடி முதல் 280 கோடி வரை உலகளவில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் 2வது நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிறு என மேலும், 2 விடுமுறை நாள் உள்ள நிலையில், 400 முதல் 450 கோடி வசூலை முதல் வாரத்திலேயே கேஜிஎஃப் 2 அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











