கடைசிக்கட்ட படப்பிடிப்பில் 'கேஜிஎப் 2'... பிரமாண்ட செட்டில் வில்லன்களைத் தெறிக்க விடும் அதிரடி யஷ்

By

Recommended Video

KGF Chapter 2 First Look | Trailer Update | Yash | Sanjay Dutt | Prashanth Neel

பெங்களூரு: யஷ் நடிக்கும் கேஜிஎப் 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்க இருக்கிறது.

மொக்கின மனசு என்ற கன்னடபடம் மூலம் நடிகராக அறிமுகமானவர், யஷ். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், ரூபா ஐயர் இயக்கிய சந்திரா படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.

இவர் நடித்த 'கே.ஜி.எஃப்' என்ற படம் கன்னடம் தவிர தமிழ் உட்பட 5 மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

நடிகர் விஷால்

நடிகர் விஷால்

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், சூப்பர் ஹிட்டானதால் இந்தியா முழுவதும் அறியப்பட்டார் யஷ். இந்தப் படத்தை நடிகர் விஷால் தமிழில் வெளியிட்டார்.
இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இதையும் இயக்குகிறார்.

ஶ்ரீனிதி ஷெட்டி

ஶ்ரீனிதி ஷெட்டி

இதில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற வில்லனாக நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி இதிலும் ஹீரோயினாக நடிக்கிறார். ரவீனா டாண்டன், ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். முதல் பாகத்தை தமிழில் வெளியிட்ட விஷால், இதையும் வெளியிடுகிறார். முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடைசிக்கட்ட படப்பிடிப்பு

கடைசிக்கட்ட படப்பிடிப்பு

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் மாதமும் இரண்டாம் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்னும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது. இப்போது இதன் ஷூட்டிங் மைசூருவில் நடந்து வருகிறது. இங்கு யாஷ், ஶ்ரீனிதி உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

5 மொழிகளில்

5 மொழிகளில்

இதையடுத்து படக்குழு ஐதராபாத் செல்கிறது. அங்கு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. வில்லன்களுடன் யஷ் மோதும் ஆக்ரோஷமான ஆக்‌ஷன் காட்சிகள் இதுவரை இல்லாத அளவு படமாக்கப்பட இருக்கின்றன. ஜூலை மாதம் கன்னடம், தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் படம் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Read more about: kgf 2 yash srinidhi shetty யஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X