அதீராவின் ஆட்டத்தை பார்க்க ரெடியா.. கே.ஜி.எஃப் 2 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போ தெரியுமா?
சென்னை: கன்னட நடிகர் யஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் வெளியான கே.ஜி.எஃப் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
அதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகிறது. இந்த படத்தில் வில்லன் அதீராவாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார்.
கே.ஜி.எஃப் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
கே.ஜி.எஃப்
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் ஃபர்ஸ்ட் சேப்டர் திரைப்படம், இந்தியளவில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. மாஸ், கிளாஸ் என அசத்திய இந்த படம் பல மொழி ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது.
ஃபர்ஸ்ட் லுக்
கே.ஜி.எஃப் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் டிசம்பர் 21ம் தேதி மாலை 5.45 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
அதீராவின் ஆட்டம்
கே.ஜி.எஃப் முதல் பாகம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த படத்தில் வில்லனாக பாலிவுட்டின் பிரபல நடிகர் சஞ்சய் தத் அதீரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதீராவின் ஆட்டம் ஆரம்பம் என்ற ட்வீட்டை தற்போது சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சூப்பர்ஸ்டார் யஷ்
ராக்கிங்க் ஸ்டார் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எஃப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாவதை அறிந்த ரசிகர்கள் உற்சாகத்தில் ட்விட்டரை தெறிக்க விட்டு வருகின்றனர். ராக்கி பாயாக நடித்துள்ள யஷ் மற்றும் அதீரா மோதும் சண்டை காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெலிகாப்டரில் பூமழை
கே.ஜி.எஃப் படம் ரிலீசான போது, ராக்கிங் ஸ்டார் யஷ்ஷின் பெரிய கட்டவுட்டுக்கு ஹெலிகாப்டரில் வந்து பூமழை பொழிந்த வீடியோக்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











