இது பாகுபலி ஆச்சே.. அதீராவை காட்டவில்லை.. ஏமாற்றியதா கே.ஜி.எஃப் சேப்டர் 2 ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை: கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் ராக்கிங் ஸ்டார் யஷ் நடிப்பில் உருவான கே.ஜி.எஃப் சேப்டர் 1 படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த நிலையில், தற்போது கே.ஜி.எஃப் சேப்டர் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இரண்டாம் பாகத்தில் வில்லன் ஆதீராவை ஃபர்ஸ்ட் லுக்கில் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஃபர்ஸ்ட் லுக் ராக்கி பாயை மையப்படுத்தியே வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

ஓராண்டு நிறைவு

கன்னட திரையுலகில் வெளியான கே.ஜி.எஃப் படம் உலகளவில் 250 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டி மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி வெளியான கே.ஜி.எஃப் இன்றுடன் ஒராண்டை நிறைவு செய்துள்ளது. காலை முதலே கே.ஜி.எஃப் படத்தின் முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை கன்னட ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினர்.

அதீரா எங்கே?

கே.ஜி.எஃப் சேப்டர் 2 ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வில்லன் அதீராவாக பாலிவுட்டின் முன்னணி நடிகர் சஞ்சய்த் தத் நடித்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக்கில் அவரது லுக்கும் இடம்பெறும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த ஃபர்ஸ்ட் லுக் சின்ன ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இருந்தாலும், படத்தில் சஸ்பென்சாக அதீரா வருவாரா இல்லை டீஸர் மற்றும் டிரைலரில் அதீராவை படக்குழு ரிலீஸ் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இது பாகுபலி ஆச்சே

கே.ஜி.எஃப் சேப்டர் 2 ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ள நிலையில், பாகுபலி திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ், அடிமைகளுடன் சேர்ந்து சிலையை தூக்குவது போல, மிகப்பெரிய தூணை நடிகர் யஷ் அடிமைகளுடன் தூக்கும் ஃபர்ஸ்ட் லுக் உருவாகியுள்ளது மீம் க்ரியேட்டர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

5 மொழிகளில்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் கே.ஜி.எஃப் சேப்டர் 2 படம் உருவாகி வருகிறது. தற்போது அந்த அந்த மொழிகளில் தனித்துவமான போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

தளபதி ரசிகர்கள் வாழ்த்து

ராஜ்யத்தை மறு உருவாக்கம் செய்யும் அரசனாக ராஜு பாய் அடிமைகளுடன் இணைந்து உழைக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த படம் வெற்றியடைய விஜய் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

டிபி சேஞ்ச்

ராஜு பாயாக யஷ் மிரட்டல் லுக் கொடுத்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதனை பார்த்த இந்த நெட்டிசன் எத்தனை ரசிகர்கள் அவர்களது டிபிக்களை சேஞ்ச் பண்ணீங்கன்னு கேட்டுள்ளார்.

தல ரசிகர்கள் வாழ்த்து

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடுன்னு சும்மாவா சொன்னாங்க, தல - தளபதி ரசிகர்களுக்குள் போட்டியிருந்தாலும், நல்ல திறமை எங்க இருந்து வந்தாலும், அஜித் - விஜய் ரசிகர்கள் ஆதரவு நிச்சயம் இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X