இந்திய அளவில் கேஜிஎப் 2 செய்த சாதனை... பாகுபலி 2 படத்துக்கு அப்புறமா இந்தப்படம்தான்!
சென்னை : நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டன்டன் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த மாதம் 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசான படம் கேஜிஎப் சாப்டர் 2. இதன் முதல் பாகம் ஏற்படுத்திய வசூல் சாதனையை தற்போது இந்தப் படம் முறியடித்துள்ளது.

கன்னட மொழிப்படங்கள்
கன்னட மொழிகளில் சிறப்பான படங்கள் மிகவும் குறைவு. மற்ற மொழிப் படங்களை டப்பிங் செய்து அல்லது மொழி மாற்றம் செய்து அங்கு படங்கள் வெளியாகும். தமிழ், தெலுங்கு, மலையாளத்தை காட்டிலும் கன்னட மொழிப் படங்களில் திரைக்கதை உள்ளிட்டவை சிறப்பாக இருக்காது.

சூப்பர் ஹீரோ புனீத்
ஆயினும் அங்கு சிறப்பான ஹீரோக்கள் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றனர். சமீபத்தில் மறைந்த புனீத் அங்கு சூப்பர் ஹீரோவாக இருந்தார். அவரை ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் அவரது மறைவு ரசிகர்களை வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலையில் தற்போது கேஜிஎப் என்ற படத்தின் மூலம் தங்களது வலிமையை கன்னடத் திரையுலகினர் நிரூபித்துள்ளனர்.

மிரட்டலான வரவேற்பு
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னதாக கேஜிஎப் சாப்டர் 1 படம் ரிலீசானது. இந்தப் படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய வசூலையும், வரவேற்பையும் பெற்று கன்னடத் திரையுலகை மற்றவர்களும் திரும்பிப் பார்க்க செய்தது. அந்த வகையில் யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் இந்தப் படத்தின் 2வது பாகமும் கடந்த மாதத்தில் ரிலீசாகி மிரட்டலான வரவேற்பை பெற்றுள்ளது.

ரூ.1000 கோடி வசூல்
கன்னட திரைப்படங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்வதே தன்னுடைய நோக்கம் என்று முன்னதாக நடிகர் யஷ் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். அந்த நோக்கம் சிறப்பாக நிறைவேறி வருவதே உண்மை. இந்தப் படம் கடந்த ஒரு மாதத்தில் சர்வதேச அளவில் 1000 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்துள்ளது.

இந்தியாவில் ரூ.1000 கோடி வசூல்
இந்திய அளவிலும் கேஜிஎப் சாப்டர் 2 படம் தற்போது 1000 கோடி ரூபாய் வசூலை இந்திய பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது. முன்னதாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 படமே இந்த சாதனையை செய்திருந்தது. இந்நிலையில் தற்போது கேஜிஎப் 2 இந்த சாதனையை செய்துள்ள இரண்டாவது படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
Recommended Video

கேஜிஎப் சாப்டர் 3?
சர்வதேச அளவில் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை கேஜிஎப் 2 படம் சில தினங்களுக்கு முன்பே செய்துள்ள நிலையில், தற்போது இந்திய அளவிலும் 1000 கோடி வசூல் சாதனையை செய்துள்ளது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் அடுத்த பாகத்தின் சூட்டிங் விரைவிலேயே துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











